யூரோ 2020: பிரான்ஸ், இங்கிலாந்து அபாரம்

யூரோ 2020 கால்பந்து போட்டி தகுதிச் சுற்றின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை இரவு மாசிடோனியாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் இங்கிலாந்து 5-1 என்ற கோல் கணக்கில் மான்டிநீகரோ அணியை வென்றது.
கோலடித்த மகிழ்ச்சியில் பிரான்ஸ் வீரர்கள்.
கோலடித்த மகிழ்ச்சியில் பிரான்ஸ் வீரர்கள்.


யூரோ 2020 கால்பந்து போட்டி தகுதிச் சுற்றின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை இரவு மாசிடோனியாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் இங்கிலாந்து 5-1 என்ற கோல் கணக்கில் மான்டிநீகரோ அணியை வென்றது.
மான்டிநீகரோ வீரர் மார்கோ வெúஸாவிக் தனது அணிக்கு முதல் கோலை அடித்ததால் இங்கிலாந்து வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சுதாரித்து ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மைக்கேல் கீன் முதல் கோலை அடித்தார். பின்னர் பர்கிலே இரண்டு கோல்களை அடித்த நிலையில், கேப்டன் ஹாரி கேன், ரஹீம் ஸ்டெர்லிங் ஏனைய கோல்களை அடித்தனர். இறுதியில் 5-1 என வென்றது இங்கிலாந்து.
குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது அந்த அணி.
பிரான்ஸ் அபாரம்
 குரூப் எச் பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியன் பிரான்ஸ் 4-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை பந்தாடியது. இளம் வீரர் கிளியன் மாப்பே, ஆன்டன் கிரீஸ்மேன், ஒலிவியர் ஜிரெளட் கோலடித்தனர்.
அடுத்த ஆட்டத்தில் ஜூன் 8-ஆம் தேதி துருக்கியுடன் மோதுகிறது பிரான்ஸ்.
ரொனால்டோ காயம்
லிஸ்பனில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல்-செர்பியா இடையே நடைபெற்ற ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. காலில் காயம் ஏற்பட்டதால் இடையிலேயே வெளியேறினார் நட்சத்திர வீரர் ரொனால்டோ. இது போர்ச்சுகல் அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
அடுத்து நேஷன்ஸ் லீக் அரையிறுதியில் போர்ச்சுகல்-ஸ்விட்சர்லாந்து அணிகள் ஜூன் 5-ஆம் தேதி மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com