ஆஸி.க்கு எதிரான ஒரு நாள் ஆட்டம்: பாக். அணிக்கு 267 ரன்கள் இலக்கு
By DIN | Published On : 28th March 2019 01:09 AM | Last Updated : 28th March 2019 01:09 AM | அ+அ அ- |

பாகிஸ்தானுக்கு எதிரான 3 ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்துள்ளது.
267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடி வருகிறது.
அபுதாபியில் 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இரு அணிகளும் கடந்த 22ஆம் தேதி முதல் விளையாடி வருகிறது.
முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி. வென்றது. 2ஆவது ஆட்டத்திலும் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது.
புதன்கிழமை 3ஆவது ஒரு நாள் ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தாடங்கியது.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது ஆஸி. அணி.
கேப்டன் ஆரோன் பின்ச் 90 ரன்களும், மாக்ஸ்வெல் 47 ரன்களும் குவித்தனர். இவ்வாறாக 6 விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்கள் முடிவில் 266 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி 35 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...