ஆசிய ஸ்குவாஷ்: இறுதிச் சுற்றில் ஜோஷ்னா, செளரவ் கோஷல்

ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன் போட்டி இறுதிச் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ஜோஷ்னா சின்னப்பா தகுதி பெற்றுள்ளார்.
ஆசிய ஸ்குவாஷ்: இறுதிச் சுற்றில் ஜோஷ்னா, செளரவ் கோஷல்
Published on
Updated on
1 min read

ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன் போட்டி இறுதிச் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ஜோஷ்னா சின்னப்பா தகுதி பெற்றுள்ளார்.
 கோலாம்பூரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் 11-7, 12-10, 11-3 என்ற கேம் கணக்கில் சிவசங்கரி சுப்பிரமணியத்தை வெற்றி பெற்று இறுதிச் சுற்றில் நுழைந்தார்.
 ஜகார்த்தா ஆசிய போட்டி அரையிறுதியில் சிவசங்கரி சுப்பிரமணியத்திடம் தோல்வியுற்றதற்கு பழிதீர்க்கும் வகையில் இப்போட்டியில் ஜோஷ்னா வென்றது குறிப்பிடத்தக்கது.
 இறுதிச் சுற்றில் செளரவ் கோஷல்: ஆடவர் பிரிவில் அரையிறுதியில் இந்திய நட்சத்திர வீரர் செளரவ் கோஷல் 11-2, 11-6, 11--4 என்ற கேம் கணக்கில் மலேசியாவின் எயின் யோவை வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். 4-ஆம் நிலை வீரர் லியோ சுன் மிங்கை இறுதியில் எதிர்கொள்கிறார் செளரவ்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.