கிரிக்கெட்டின் முதல் போட்டி நடுவராக இந்தியப் பெண் தேர்வு!

கிரிக்கெட்டின் முதல் போட்டி நடுவராக இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி (51) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
கிரிக்கெட்டின் முதல் போட்டி நடுவராக இந்தியப் பெண் தேர்வு!

கிரிக்கெட்டின் முதல் போட்டி நடுவராக இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி (51) தேர்வு செய்யப்பட்டுள்ளார். லட்சுமியை நியமித்து ஐசிசி சர்வதேச நடுவர் குழு செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது. இதையடுத்து போட்டி நடுவராக தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

2008-09 சீசனில் உள்ளூர் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் ஜி.எஸ்.லட்சுமி நடுவராக செயல்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சர்வதேசப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளுக்கும் நடுவராக பணியாற்றியுள்ளார். இதுகுறித்து லட்சுமி கூறியதாவது:

ஐசிசி-யின் சர்வதேச நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும். இந்திய கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் விளையாடியுள்ளேன். அதுபோன்று கள நடுவராகவும் செயல்பட்டுள்ளேன். ஒரு வீரராகவும், கள நடுவராகவும் நான் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் சர்வதேச போட்டிகளிலும் சிறந்த போட்டி நடுவராக செயல்படுவேன் நம்பிக்கை உள்ளது. 

இந்த தருணத்தில் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில், பிசிசிஐ மற்றும் எனது மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com