துளிகள்...
By DIN | Published On : 15th May 2019 12:51 AM | Last Updated : 15th May 2019 12:51 AM | அ+அ அ- |

ஈஸ்டர் பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதலை அடுத்து இலங்கையில் கலவரங்கள் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அமைதி நிலவச் செய்ய வேண்டும் என முன்னாள் கேப்டன் குமார் சங்ககரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆசிய கால்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக யாங்கூன் யுனைடெட் மற்றும் கம்போடியாவின் நாகா வேர்ல்ட் அணிகள் இடையிலான ஏஎஃப்சி கிளப் கோப்பை ஆட்டத்தை பெண் நடுவர்களான ஜப்பானின் யோஷிமி எமஷிட்டா, மகோட்டோ போúஸானா, நவோமி டெஷிரோகி ஆகியோர் மேற்பார்வையிட உள்ளனர்.
மாட்ரிட் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதின் மூலம் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், ஏடிபி தரவரிசையில் தனது ஆதிக்கத்தை உறுதி செய்துள்ளார்.