ரத்தக்காயத்துடன் ஆடினார் வாட்ஸன்: ஹர்பஜன் வேதனை
By DIN | Published On : 15th May 2019 12:59 AM | Last Updated : 15th May 2019 12:59 AM | அ+அ அ- |

முட்டியில் ரத்தக்காயத்துடன் ஆடினார் வாட்ஸன் என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
ஹைதராபாதில் நடைபெற்ற ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் சென்னையை கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் வென்று பட்டத்தை கைப்பற்றியது மும்பை அணி. இதில் சென்னையின் தொடக்க வீரர் வாட்ஸன் தனியாக நின்று சிறப்பாக ஆடி 59 பந்துகளில் 80 ரன்களை குவித்தார். தனது அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்ற நிலையில் ரவீந்திர ஜடேஜாவின் தவறால் ரன் அவுட்டானார் வாட்ஸன். அப்போது கீழே தாவி கீரிஸை தொட முயன்றும் அவரால் இயலவில்லை.
இதுதொடர்பாக ஹர்பஜன் சிங் சமூகவலைதளத்தில் கூறியுள்ளதாவது-
வாட்ஸன் கீழே தாவி கிரீஸை தொட முயன்ற போது முட்டியில் ரத்த காயம், வலி ஏற்பட்டது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் அவர் ஆடினார். ஆட்டம் முடிந்த பின் அவருக்கு முட்டியில் 6 தையல்கள் போடப்பட்டன. ரத்தம் வழிந்த நிலையில் இருந்தார் வாட்ஸன். ஆனால் அவர் அதை எவரிடமும் கூறவில்லை என பதிவிட்டுள்ளார் சிங்.
முட்டியில் ரத்தகாயத்துடன் பவுண்டரிக்கு பந்தை விரட்டும் வாட்ஸன்.