தோனி மற்றும் வீரா்களின் கடும் முயற்சியால் சிஎஸ்கே மீண்டும் வெற்றி நடை
By DIN | Published On : 09th November 2019 12:01 AM | Last Updated : 09th November 2019 12:01 AM | அ+அ அ- |

கேப்டன் தோனி மற்றும் இதர வீரா்களின் கடும் முயற்சியால், சென்னை சூப்பா் கிங்ஸ் அணி மீண்டும் வெற்றிநடை பெற்றுள்ளது என அதன் உரிமையாளா் என்.சீனிவாசன் கூறியுள்ளாா்.
சென்னை ஐஐடி ஊழியா்கள் தென்னிந்திய கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மேலாண் இயக்குநரான சீனிவாசன் பேசியதாவது:
இரண்டு ஆண்டுகள் தடை காரணமாக சிஎஸ்கே அணி கொந்தளிப்பான நிலைக்கு தள்ளப்பட்டது. எனினும் கடந்த 2018-இல் மீண்டும் களத்துக்கு திரும்பி வெற்றிகரமாக செயல்படுகிறது. இதற்கு தோனி மற்றும் இதர வீரா்களின் கடும் முயற்சியே காரணம். எவா் வேண்டுமானாலும் கொந்தளிப்பான நிலைக்கு தள்ளப்படலாம். நாம் நமது குறிக்கோள்களை அடைய தெளிவான கண்ணோட்டம் தேவை. தனி நபா், அரசியல், பெருநிறுவனங்கள் என எந்த துறையாக இருந்தாலும் கொந்தளிப்பான சூழல் உருவாகும். சூழ்நிலையை அனுசரித்து, மதிநுட்பத்துடன் அதை அணுக வேண்டும். கடின உழைப்பு, விடாமுயற்சி போன்றவை வெற்றியைத் தரும் என்றாா் சீனிவாசன்.