ஐபிஎல்: 3 புதிய நகரங்களுக்கு வாய்ப்பு!
By எழில் | Published On : 09th November 2019 03:32 PM | Last Updated : 09th November 2019 03:32 PM | அ+அ அ- |

ஐபிஎல்-லில் கூடுதலாக அணிகளைச் சேர்ப்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை. எனினும் அடுத்த வருடம் கூடுதலாக மூன்று நகரங்களில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
ஐபிஎல் உயரதிகாரக் குழுக் கூட்டம் அதன் சோ்மன் பிரிஜேஷ் பட்டேல் தலைமையில் செவ்வாய்க்கிழமை மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. லக்னோ, குவஹாட்டி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று நகரங்களிலும் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தங்கள் அணிக்கான ஆட்டங்கள் சிலவற்றை லக்னோவில் நடத்திக்கொள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விருப்பம் தெரிவித்துள்ளது. அதேபோல அஹமதாபாத்துக்குப் பதிலாக குவஹாட்டியில் சில ஆட்டங்களை நடத்திக்கொள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விருப்பம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளமானோர் இருப்பதால் அங்கும் ஐபிஎல் ஆட்டங்களை நடத்தலாம் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.