400 சிக்ஸர்கள்: புதிய சாதனைக்குத் தயாராகும் ரோஹித் சர்மா
By எழில் | Published On : 09th November 2019 03:19 PM | Last Updated : 09th November 2019 03:19 PM | அ+அ அ- |

ரோஹித் சர்மா என்றாலே அவர் அடிக்கும் சிக்ஸர்கள் தான் தற்போது ஞாபகத்துக்கு வருகின்றன. கடந்த மூன்று வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் புதிய சாதனைக்குத் தயாராகி விட்டார் ரோஹித் சர்மா.
ஒருநாள் கிரிக்கெட்டில் 232 சிக்ஸர்கள் அடித்துள்ளார் ரோஹித் சர்மா. டெஸ்டுகளில் 51 சிக்ஸர்களும் டி20களில் 115 சிக்ஸர்களும் அடித்துள்ளார். மொத்தமாக 398 சிக்ஸர்கள். இதன்மூலம் இன்னும் 2 சிக்ஸர்கள் அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்களை அடித்த மூன்றாவது வீரர் என்கிற பெருமையை அவர் பெறுவார்.
பாகிஸ்தானின் சாஹித் அஃப்ரிடி 476 சிக்ஸர்களும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் 534 சிக்ஸர்களும் அடித்துள்ளார்கள்.
நாகபுரியில் இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.