பகலிரவு டெஸ்ட்: வங்கதேச அணி முதலில் பேட்டிங்!

பகலிரவு டெஸ்ட்: வங்கதேச அணி முதலில் பேட்டிங்!

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் இல்லை. வங்கதேச அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

இந்திய அணி கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்கிறது. பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியின் தீவிர முயற்சியால் கொல்கத்தாவில் நடத்தப்படும் இந்த ஆட்டத்தில் வங்கதேச அணியுடன் மோதுகிறது இந்தியா. இந்த ஆட்டத்தில் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற பந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்தியா-வங்கதேசம் இடையே நடைபெறவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட்டுக்காக முதல் 3 நாள்கள் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று விட்டன என கங்குலி கூறியுள்ளாா். பகலிரவு டெஸ்ட் ஆட்டத்துக்காக கொல்கத்தா நகரமே பிங்க் நிறமாக மாறியுள்ளது. மைதானம் அருகே பெரிய ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது. 

2015-இல் அடிலெய்டில் ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து இடையே நடைபெற்ற முதல் பகலிரவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளில் இந்தியா, வங்கதேசம் தவிர மற்ற அணிகள் அனைத்தும் பகலிரவு டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்ற அனுபவத்தை கொண்டுள்ளன. இதுவரை உலகம் முழுவதும் 11 பகலிரவு டெஸ்ட் ஆட்டங்கள் நடந்துள்ளன.

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் இல்லை. வங்கதேச அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, கங்குலி, டெண்டுல்கர், டிராவிட், லக்‌ஷ்மண், ஹர்பஜன் சிங், அகர்கர் என பிரபலங்கள் இந்த வரலாற்றுத் தருணத்தில் பங்கேற்றுள்ளார்கள். வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோரிடம் இரு அணி வீரர்களும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இந்த நிகழ்வில் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கருக்கு ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தார்கள். ராணுவ பேண்ட் வீரா்களால் இரு அணிகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.

மதிய உணவு இடைவேளையின்போது, சச்சின், கங்குலி, லக்‌ஷ்மண், டிராவிட், கும்ப்ளே ஆகியோர் 2001 கொல்கத்தா டெஸ்ட் குறித்து தங்களுடைய நினைவுகளைக் கூறுவார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com