முருகப்பா ஹாக்கி: இந்தியன் ஆயில், பஞ்சாப் நேஷனல் வங்கி வெற்றி
By DIN | Published On : 01st September 2019 01:44 AM | Last Updated : 01st September 2019 01:44 AM | அ+அ அ- |

93-ஆவது எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அணிகள் வெற்றி பெற்றன.
போட்டியின் 3-ஆவது நாளான சனிக்கிழமை இந்திய விமானப்படை-பஞ்சாப் நேஷனல் வங்கி அணிகள் மோதிய ஆட்டத்தில் 2-1 என பஞ்சாப் வங்கி வென்றது. விமானப்படை தரப்பில் அஜித் பண்டிட், பஞ்சாப் வங்கி தரப்பில் சதீந்தர் தலால், சுக்ஜித் சிங் கோலடித்தனர்.
ரயில்வே விளையாட்டு வாரியம்-பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது. ரயில்வே தரப்பில் ஐயப்பாவும், பஞ்சாப் சிந்து வங்கி தரப்பில் ககன்ப்ரீத் சிங்கும் கோலடித்தனர்.
மூன்றாவது ஆட்டத்தில் இந்திய ராணுவத்தை 2-3 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஆயில் நிறுவனம் வெற்றி பெற்றது.
ராணுவ தரப்பில் ஜிதேந்தர் ரதி, சுக்தீப் சிங்ýம், ஐஓசி தரப்பில் ஆர்மன் குரேஷி, அப்பன் யுசூப், குர்ஜிந்தர் சிங் கோலடித்தனர்.