யுஎஸ் ஓபன்: நாக் அவுட் சுற்றில் பெடரர், ஜோகோவிச், செரீனா
By DIN | Published On : 01st September 2019 01:41 AM | Last Updated : 01st September 2019 01:41 AM | அ+அ அ- |

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் நாக் அவுட் சுற்றுக்கு முன்னணி நட்சத்திரங்கள் பெடரர், ஜோகோவிச், செரீனா, மடிஸன் கீய்ஸ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
நியூயார்க்கில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் 3-ஆவது சுற்றில் ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் டெனிஸ் குட்லாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
ஸ்விட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா 6-4, 7-6, 7-6 என இத்தாலியின் பாவ்லோ லோரேன்ஸியை வென்றார்.
3 ஆம் நிலை வீரர் பெடரர் 6-2, 6-2, 6-1 என பிரிட்டனின் டேன் இவான்ûஸ வீழ்த்தினார். ஜப்பான் வீரர் நிஷிகோரி 6-2, 6-4, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸி. வீரர் அலெக்ஸிடம் வீழ்ந்தார்.
மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் 6-3,. 6-2 என்ற நேர் செட்களில் செக். குடியரசின் கரோலினா முச்கோவாவை வென்றார்.
கரோலினா பிளிஸ்கோவா 6-1, 4-6, 6-4 என என ஆன்ஸ் ஜெபைரியும், ஆஷ்லி பர்டி 7-5, 6-3 என மரியா ஸக்காரியையும் தோல்வியுறச் செய்தனர்.
மடிஸன் கீய்ஸ் 6-3, 7-5 என சோபியா கெனினை வென்றார்.