இம்ரான் கான் பின்னணி: பாக். பயிற்சியாளராகும் முன்னாள் வீரர்கள்!
By Raghavendran | Published On : 04th September 2019 12:22 PM | Last Updated : 04th September 2019 12:22 PM | அ+அ அ- |

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்களாக முன்னாள் வீரர்கள் இருவர் பிரதமர் இம்ரான் கான் பின்னணியுடன் தேர்வாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2019 உலகக் கோப்பையுடன் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து புதிய பயிற்சியாளர் குழுவை தேர்வு செய்யும் பணியில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தலைமை தேர்வாளர் மற்றும் தலைமைப் பயிற்சியாளராகவும், வக்கார் யூனிஸ் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட உள்ளதாகவும், பிரதமர் இம்ரான் கான் இவர்களுக்கு சிபாரிசு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருவருடனும் ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறைப்படி இருவரையும் பயிற்சியாளர்களாக அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இவர்கள் விருப்பப்படி துணைப் பயிற்சியாளர்களையும் நியமித்துக்கொள்ள, அணித் தேர்வில் ஈடுபட அதிகாரம் வழங்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 2023 உலகக் கோப்பை வரை வழங்கப்பட உள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...