சுடச்சுட

  

  இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஊதியம் 20% உயர்வு! 

  By DIN  |   Published on : 10th September 2019 04:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  RAVI_shastri

   

  இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி வரும் 2021 வரை மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜாம்பவான் கபில்தேவ் தலைமையிலான குழு ரவிசாஸ்திரியை மீண்டும் பயிற்சியாளராக தேர்வு செய்தது.

  இதற்கான புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் 2021 இருபதுக்கு 20 உலகக் கோப்பை வரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நீடிப்பார் என்று தெரவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், புதிய ஒப்பந்தத்தில் ரவி சாஸ்திரியின் ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு ரவி சாஸ்திரியின் ஊதியம் ஜஸ்ட் ரூ.10 கோடி.

  முன்னதாக, ரவி சாஸ்திரியின் ஊதியம் ஆண்டுக்கு ரூ.8 கோடியாக இருந்தது. தற்போதைய புதிய ஒப்பந்தத்தில் அவரது ஊதியம் 20% உயர்த்தப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க: மீண்டும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆனார் ரவி சாஸ்திரி

  ரவி சாஸ்திரியுடன், இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிக்கும் இதர பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாரத் அருண் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதரின் ஆண்டு வருமானம் தலா ரூ.3.5 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  ரவி சாஸ்திரியை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கும் முடிவை அறிவித்த கபில்தேவ் கூறியதாவது,
  சாஸ்திரியின் சாதனைகள் அதிகம்: பயிற்சியாளருக்கான போட்டியில் சாஸ்திரி முதலிடத்திலும், மைக் ஹெஸ்ஸன் இரண்டாவது இடத்திலும், டாம் மூடி மூன்றாவது இடத்திலும் இருந்தனர். ஏனைய பயிற்சியாளர்களை ஒப்பிடும் போது, சாஸ்திரியின் பயிற்சியில் இந்தியா பல்வேறு சிகரங்களை அடைந்தது.

  குறிப்பாக 71 ஆண்டுகளில் முதன்முறையாக ஆஸி.யில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் அந்தஸ்தைப் பெற்றது.

  எனினும் 2015, 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறி தோல்வியைத் தழுவியது. 

  சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் 21 டெஸ்ட்களில் 13-இலும், 60 ஒருநாள் ஆட்டங்களில் 43-இலும், 36 டி20 ஆட்டங்களில் 25-இலும் இந்தியா வென்றுள்ளது என்றார் கபில்தேவ்.

  2021 வரை பதவிக்காலம்: மே.இ.தீவுகள் தொடருக்கு செல்லும் முன்பே பயிற்சியாளராக ரவிசாஸ்திரியே தொடர விரும்புவதாக கேப்டன் கோலி அழுத்தமாக கூறியிருந்தார். கேப்டன் கருத்துக்கும் மதிப்பு தரப்படும் என கபில்தேவ் கூறியிருந்தார். வரும் 2021 டி20 உலகக் கோப்பை போட்டி வரை சாஸ்திரி பதவி வகிப்பார்.  

  ஏற்கெனவே 2007 வங்கதேச தொடரில் இந்திய அணியின் மேலாளர், 2014-16-இல் அணி இயக்குநர், 2017-19-தலைமை பயிற்சியாளர் பதவிகளை வகித்தவர் சாஸ்திரி என்பது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai