உலக குத்துச்சண்டை போட்டி பிரிஜேஷ் யாதவ் வெற்றி
By DIN | Published On : 11th September 2019 01:14 AM | Last Updated : 11th September 2019 01:14 AM | அ+அ அ- |

எதிராளிக்கு குத்து விடும் பிரிஜேஷ் யாதவ்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிரிஜேஷ் யாதவ் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.
ரஷியாவின் எக்டெரின்பர்க் நகரில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதில் 87 நாடுகளைச் சேர்ந்த 450க்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆடவர் 81 கிலோ பிரிவு தொடக்க சுற்றில் பிரிஜேஷ் 50 என்ற புள்ளிக் கணக்கில் போலந்தின் மேலஸ் கோயின்ஸ்கியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். பிரிஜேஷின் சரிமாரியான குத்துகளால் கோயின்ஸ்கியின் முகத்தில் ரத்தம் வழிந்தது. அவரால் நிற்க முடியாமல் கீழே விழுந்தார்.
இந்த வெற்றியின் மூலம் ரவுண்ட் 32 பிரிவுக்குள் நுழைந்தார் பிரிஜேஷ். ஏற்கெனவே அமித் பங்கால் 52 கிலோ, கவிந்தர் பிஷ்ட் 57 கிலோ, ஆஷிஷ் வின் குமார் 75 கிலோ ஆகியோருக்கு முதல் சுற்றில் பை வழங்கப்பட்டது.