மே.இ.தீவுகள் டி20, ஒருநாள் அணியின் கேப்டனாக பொல்லார்ட் நியமனம்
By DIN | Published On : 11th September 2019 01:15 AM | Last Updated : 11th September 2019 01:15 AM | அ+அ அ- |

மே.இ.தீவுகள் டி20, ஒருநாள் அணிகளின் புதிய கேப்டனாக கிய்ரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய கேப்டன் ஜேஸன் ஹோல்டர் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நீடிப்பார்.
டிரினிடாடில் கிரிக்கெட் மே..இ. தீவுகள் தலைவர் ரிக்கி ùஸரிட்ட் இதைத் தெரிவித்தார். பொல்லார்ட் கடந்த 2016இல் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் ஆட்டத்தில் விளையாடினார் பொல்லார்ட். அதே போல் டி20 அணியின் கேப்டனாக இருந்த கார்லோஸ் பிராத்வெயிட் நீக்கப்பட்டு அதற்கும் பொல்லார்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்வுக் குழு இப்பிரச்னை தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து இந்த முடிவை எடுத்தது. ஹோல்டர் சிறந்த கேப்டனாக செயல்பட்டார். அதே நேரம் டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்குவார்.
மே.இ. தீவுகள் அணியின் வீரர்கள் ஐபிஎல், சிபிஎல் போட்டிகளில் தொடர்ந்து ஆடலாம் அதே நேரம் தேசிய அணிக்கு ஆடுவதும் முக்கியமானது என்றார்.