டான் பிராட்மேனின் 71 வருடச் சாதனையை வீழ்த்தினார் ஸ்டீவ் ஸ்மித்!

ஒருவருடத் தடைக்குப் பிறகு டெஸ்டுகளில் விளையாடி வரும் ஆஷஸ் தொடரில் ஸ்மித் எடுத்த ஸ்கோர்கள்...
டான் பிராட்மேனின் 71 வருடச் சாதனையை வீழ்த்தினார் ஸ்டீவ் ஸ்மித்!

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்டிலும் சிறப்பாக விளையாடியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். நேற்று, 145 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார்.

ஒருவருடத் தடைக்குப் பிறகு டெஸ்டுகளில் விளையாடி வரும் ஆஷஸ் தொடரில் ஸ்மித் எடுத்த ஸ்கோர்கள் - 144, 142, 92, 211, 82 மற்றும் 80.

அதாவது ஆறு இன்னிங்ஸில் 751 ரன்கள். இது ஒரு பெரிய சாதனைக்குக் காரணமாகியுள்ளது.

தொடர்ச்சியாக 10 ஆஷஸ் இன்னிங்ஸில் பிராட்மேன் 1236 ரன்கள் எடுத்தது இதற்கு முன்பு சாதனையாக இருந்தது.1937-46 வரையிலான காலகட்டத்தில் அவர் இந்த ரன்களை எடுத்துள்ளார். ஆனால் ஸ்மித், கடந்த 10 ஆஷஸ் இன்னிங்ஸ்களில் 1251 ரன்கள் எடுத்து பிராட்மேனின் சாதனையை வீழ்த்தியுள்ளார். 

பிராட்மேன் - 10 ஆஷஸ் இன்னிங்ஸ்களில் எடுத்த ஸ்கோர்கள்:

212, 169, 51, 144, 18, 102, 103, 16, 187, 234.

ஸ்டீவ் ஸ்மித் - 10 ஆஷஸ் இன்னிங்ஸ்களில் எடுத்த ஸ்கோர்கள்:

239, 76, 102, 83, 144, 142, 92, 211, 82, 80.

எனினும் பிராட்மேனின் மிகப்பெரிய சாதனை ஒன்றை ஸ்மித்தால் வீழ்த்தமுடியுமா எனத் தெரியவில்லை. ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் (974 ரன்கள்) எடுத்த வீரர் என்கிற பெருமை பிராட்மேனுக்கு உண்டு. இந்தச் சாதனையை வீழ்த்த ஸ்மித், இந்த டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுக்கவேண்டும். இதுதவிர நேற்று, மேலும் ஒரு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் ஸ்மித்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஆறு தடவை 80+ ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் (சர் எவர்டன் வீக்ஸுக்குப் பிறகு) என்கிற பெருமையை அடைந்துள்ளார் ஸ்மித். 

அதேபோல ஓர் அணிக்கு எதிராகத் தொடர்ச்சியாக 10 தடவை 50+ ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையையும் ஸ்மித் படைத்துள்ளார். இங்கிலாந்து எதிராக விளையாடிய ஆஷஸ் தொடர்களில் கடைசி 10 இன்னிங்ஸ்களிலும் அவர் அரை சதங்களை எட்டியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com