டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தீபக் புனியா தேர்வு

கஜகஸ்தானில் நடைபெற்றுவரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் புனியா.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தீபக் புனியா தேர்வு

கஜகஸ்தானில் நடைபெற்றுவரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் புனியா.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் சுவிட்சர்லாந்து வீரர் ஸ்டீஃபன் ரெய்ச்முத்தை 8-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார் தீபக் புனியா.
ஈரான் வீரர் ஹசன் யஸ்தானியுடன் 86 கிலோ எடைப் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் அவர் மோதுகிறார்.
சீனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பது தீபக் புனியாவுக்கு இது முதல்முறையாகும்.
காலிறுதியில் 7-6 என்ற புள்ளிக் கணக்கில் கம்போடியா வீரர் கர்லாஸ் ஆர்டுரோ மென்டிûஸ வீழ்த்தி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றதன் மூலம் தீபக் புனியா ஒலிம்பிக் போட்டிக்கு பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றார்.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், பஜ்ரங் புனியா, ரவிகுமார் தாஹியா ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டனர்.
தீபக் புனியா ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றால் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறும் இரண்டாவது இந்தியர் என்ற சாதனையைப் படைப்பார். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்ற முதல் இந்தியர்  சுஷில் குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com