எல்லா டெஸ்டுகளிலும் இளஞ்சிவப்பு பந்துகளைப் பயன்படுத்த வேண்டும்: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் யோசனை

வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைபடுவது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல... 
எல்லா டெஸ்டுகளிலும் இளஞ்சிவப்பு பந்துகளைப் பயன்படுத்த வேண்டும்: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் யோசனை

விளக்கொளியில் டெஸ்ட் ஆட்டம் தொடர்ந்து நடைபெறுவதற்காக இளஞ்சிவப்பு பந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் யோசனை தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து அணி. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. 2-வது டெஸ்ட் செளதாம்ப்டனில் தொடங்கியுள்ளது. 

2-வது நாளின் முடிவில் பாகிஸ்தான் அணி 86 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்தின் ஆண்டர்சன், பிராட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள். 

2-வது டெஸ்ட் ஆட்டம் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மாலை வேளையில் மழை பெய்யாத போதிலும் வெளிச்சமின்மை காரணமாக ஆட்டத்தைத் தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கு ஒரு தீர்வை கூறியுள்ளார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான். அவர் கூறியதாவது:

வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைபடுவது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. இதற்குத் தீர்வு - இளஞ்சிவப்புப் பந்தை எல்லா நேரமும் பயன்படுத்துவதுதான், முக்கியமாக இங்கிலாந்தில். கிரிக்கெட் ஒளிரப்புக்காக ஐசிசிக்குப் பெரிய தொகை அளிப்பவர்கள் இதுகுறித்து புகார் அளிக்கவேண்டும். இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கப்பட வேண்டும். வெளிச்சம் இல்லாதபோதும் ஆட்டம் தொடர வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com