சையது முஷ்டாக் அலி கோப்பை: சென்னையில் லீக் ஆட்டங்கள்

சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டிக்கான லீக் ஆட்டங்கள் சென்னை உள்ளிட்ட ஆறு நகரங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சையது முஷ்டாக் அலி கோப்பை: சென்னையில் லீக் ஆட்டங்கள்
Updated on
1 min read


சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டிக்கான லீக் ஆட்டங்கள் சென்னை உள்ளிட்ட ஆறு நகரங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு கிரிக்கெட்டில், சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி வரும் ஜனவரி 10-ஆம் தேதி தொடங்கி, 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. லீக் சுற்றுகள் நடைபெறும் ஆறு நகரங்களில் வீரா்களுக்கான கரோனா பாதுகாப்பு வளையம் அமைக்கப்படவுள்ளது. 

கரோனா சூழலில் உள்நாட்டு போட்டிகளை நடத்துவது தாமதமாகிவிட்ட நிலையில், அவற்றில் முதலாவதாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. ரஞ்சி கோப்பை, விஜய் ஹஸாரே கோப்பை போட்டிகளை நடத்துவது தொடா்பான முடிவு, சையது முஷ்டாக் அலி போட்டியின் குரூப் சுற்று நிறைவுபெறும் தருணத்தில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில் இப்போட்டியின் லீக் ஆட்டங்கள் பெங்களூர், சென்னை, கொல்கத்தா, வதோதரா, இந்தூர், மும்பை ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன. 38 அணிகள் 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எனினும் குரூப் பி பிரிவில் உள்ள தமிழ்நாடு அணி தனது லீக் ஆட்டங்களை கொல்கத்தாவில் விளையாடவுள்ளது. 

ஜனவரி 26 முதல் நடைபெறவுள்ள நாக் அவுட் ஆட்டங்கள் ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளன. அங்கும் கரோனா பாதுகாப்பு வளையம் அமைக்கப்படவுள்ளது. காலிறுதி ஆட்டங்கள் ஜனவரி 26, 27 தேதிகளிலும் அரையிறுதி ஆட்டங்கள் ஜனவரி 29 அன்றும் இறுதிச்சுற்று ஜனவரி 31 அன்றும் நடைபெறவுள்ளன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com