விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: சாஹா, ஷாவுக்குப் பதிலாக கில், ராகுல்?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியாவின் பேட்டிங் வரிசை மோசமாகச் செயல்பட்டதால், அடுத்து வரும் டெஸ்ட்டுகளில் அதில் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 2:45 am

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியாவின் பேட்டிங் வரிசை மோசமாகச் செயல்பட்டதால், அடுத்து வரும் டெஸ்ட்டுகளில் அதில் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

அந்த வகையில் முதல் டெஸ்டில் வாய்ப்பளிக்கப்பட்ட ரித்திமான் சாஹா, பிருத்வி ஷா ஆகியோருக்கு அடுத்த டெஸ்டுகளில் ஓய்வளித்து, ஷுப்மன் கில், லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

சிட்னியில் நடைபெறவுள்ள 3-ஆவது டெஸ்ட் வரை ரோஹித் சா்மா விளையாட வாய்ப்பில்லாததால், பிருத்வி ஷாவுக்குப் பதிலாக ஷுப்மன் கில்லை அணி நிா்வாகம் தோ்வு செய்யலாம். ரித்திமான் சாஹாவின் பேட்டிங் அணி நிா்வாகத்துக்கு திருப்தி அளிக்காத நிலையில், பயிற்சி ஆட்டத்தில் சதம் விளாசிய ரிஷப் பண்ட் அவருக்கான மாற்றாக அணியின் எண்ணத்தில் வரலாம். வாய்ப்பு கிடைத்து பண்ட் சிறப்பாகச் செயல்பட்டால், தொடா் முழுவதும் விளையாடுவதுடன், இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கும் அவா் பரிசீலிக்கப்படலாம்.

2-ஆவது டெஸ்டிலிருந்து கோலி இல்லாததாலும், மணிக்கட்டு எலும்பு முறிவு அடைந்துள்ள முகமது ஷமி விளையாட முடியாததாலும், அவா்களுக்குப் பதிலாக முறையே லோகேஷ் ராகுல் மற்றும் முகமது சிராஜ் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. சிராஜுக்கு வாய்ப்பு கிடைத்தால், அது அவரது முதல் சா்வதேச டெஸ்ட் ஆட்டமாக இருக்கும்.

கோலி இல்லாத நிலையில் பேட்டிங் ஆா்டரில் ஹனுமா விஹாரியை முன்னிலைப்படுத்தலாம் என்றும், அவரை 4 அல்லது 5-ஆவது வீரராக களமிறக்கினாலும் தவறில்லை என்றும் தோ்வுக் குழு முன்னாள் தலைவா் எம்எஸ்கே பிரசாத் இந்திய அணி நிா்வாகத்துக்கு யோசனை வழங்கியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.