மெல்போர்ன் ஆடுகளம் பிரித்வி ஷாவுக்குப் பொருத்தமாக இருக்கும்: மைக்கேல் ஹஸ்ஸி

மெல்போர்ன் ஆடுகளம் இந்தியத் தொடக்க வீரர் பிரித்வி ஷாவுக்குப் பொருத்தமாக இருக்கும் என...
மெல்போர்ன் ஆடுகளம் பிரித்வி ஷாவுக்குப் பொருத்தமாக இருக்கும்: மைக்கேல் ஹஸ்ஸி

2-வது டெஸ்ட் நடைபெறும் மெல்போர்ன் ஆடுகளம் இந்தியத் தொடக்க வீரர் பிரித்வி ஷாவுக்குப் பொருத்தமாக இருக்கும் என ஆஸி. முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார்.

இந்திய அணிக்காக இதுவரை 5 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார் மும்பையைச் சேர்ந்த 21 வயது பிரித்வி ஷா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 0,4 என ரன்கள் எடுத்ததால் அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பிரித்வி ஷாவின் ஆட்டம் பற்றி ஆஸி. முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி ஒரு பேட்டியில் கூறியதாவது:

பிரித்வி ஷா மீது தேர்வுக்குழுவினர் நம்பிக்கை வைக்கவேண்டும். முதல் டெஸ்டில் அவர் ரன் எடுக்கவில்லை தான். ஆனால், ஒரு டெஸ்டில், அதுவும் கடினமான ஆடுகளத்தில் கடினமான பந்துவீச்சுக்கு எதிராகவே அவர் தோல்வியடைந்துள்ளார்.

முதல்தர கிரிக்கெட்டில் ஏழு ரன்களுக்கும் குறைவான சராசரிகளைக் கொண்டிருந்தார் ஜோ பர்ன்ஸ். அவர் மீது தேர்வுக்குழுவினர் நம்பிக்கை வைத்தார்கள். முதல் இன்னிங்ஸில் எளிதாக ஆட்டமிழந்தாலும் 2-வது இன்னிங்ஸில் தன்னம்பிக்கையுடன் விளையாடி அரை சதம் எடுத்தார். 

ஷாவின் ஆட்டம் பற்றி அறிந்துகொள்ளுங்கள். அவர் மீது நம்பிக்கை வையுங்கள். உன் மீது நம்பிக்கை வைக்கிறோம் என்பதை அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். மெல்போர்ன் ஆடுகளம் அவருக்கு மேலும் பொருத்தமாக இருக்கும். அடிலெய்ட் போல வேகத்தன்மையுடன் மெல்போர்ன் ஆடுகளம் இருக்காது. பிரித்வி ஷாவுக்கு நிறைய திறமை உள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com