இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டேவிட் வார்னர் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டிலிருந்து ஆஸி. வீரர்கள் டேவிட் வார்னர், அபாட் விலகியுள்ளார்கள்.
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டேவிட் வார்னர் விலகல்!
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டிலிருந்து ஆஸி. வீரர்கள் டேவிட் வார்னர், அபாட் விலகியுள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2-ஆவது இன்னிங்ஸில் 36 ரன்களில் சுருண்டதால், ஆஸ்திரேலியாவின் வெற்றி எளிதானது.

ஒருநாள் தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள், டி20 தொடர்களில் இருந்து விலகியிருந்த வார்னர், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கவில்லை. சிட்னியில் கரோனா பரவல் அதிகமாக இருப்பதால் 2-வது டெஸ்ட் நடைபெறும் மெல்போர்னுக்கு அவசர அவசரமாக அவர் அழைத்து வரப்பட்டார். எனினும் 2-வது டெஸ்டில் பங்கேற்பதற்கான உடற்தகுதியை அவர் அடையவில்லை. இதனால் டேவிட் வார்னரும் மற்றொரு வீரரான அபாட்டும் 2-வது டெஸ்டிலிருந்து விலகியுள்ளார். 

மேலும் சிட்னிலிருந்து மெல்போர்னுக்கு வந்துள்ள இருவரும் அணியின் கரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் மூன்றாவது டெஸ்டுக்காக அணி வீரர்களுடன் இணைவார்கள் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com