இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: பாக்ஸிங் டே டெஸ்ட் என்றால் என்ன?

இந்த ஆண்டு மூன்று பாக்ஸிங் டே டெஸ்டுகள் நடைபெறுகின்றன.
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: பாக்ஸிங் டே டெஸ்ட் என்றால் என்ன?

பாக்ஸிங் டே டெஸ்ட் என்பது கிரிக்கெட்டில் மிகவும் புகழ்பெற்ற ஒரு நிகழ்வாகும்.

கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாள் டிசம்பர் 26 அன்று தொடங்கும் டெஸ்ட் ஆட்டங்களை பாக்ஸிங் டே டெஸ்ட் என அழைப்பார்கள்.

இந்த ஆண்டு மூன்று பாக்ஸிங் டே டெஸ்டுகள் நடைபெறுகின்றன. இந்தியா - ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் - நியூசிலாந்து, இலங்கை - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் நாளை முதல் தொடங்கும் டெஸ்டுகளில் பங்கேற்கின்றன. 

பாக்ஸிங் டே என்பதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விளக்கங்கள் உள்ளன. 

பணியில் ஈடுபடும் சிறுவர்கள், தபால் ஊழியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு டிசம்பர் 26 அன்று கிறிஸ்துமஸ் பாக்ஸ் என்கிற பரிசுப்பொருளை வழங்குவார்கள். கிறிஸ்துமஸ் அன்று பணியாற்றும் பணியாளர்களுக்கு அடுத்த நாள் பரிசு வழங்கப்படுவதால் டிசம்பர் 26 தினத்தை பாக்ஸிங் டே  என் அழைக்கிறார்கள். பிரிட்டனில் தொடங்கப்பட்ட இந்த வழக்கம் பிறகு மற்ற நாடுகளுக்கும் பரவியிருக்கிறது.

பல தேவாலயங்களில் அட்டைப் பெட்டிகள் (பாக்ஸ்) வைக்கப்படும். அந்தப் பெட்டியில் பணம், பரிசுப் பொருள்களை மற்றவர்கள் போடலாம். கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாள் அந்தப் பெட்டி பிரிக்கப்பட்டு அதில் உள்ள பணமும் பரிசுப் பொருள்களும் ஏழைகளுக்கு வழங்கப்படும். டிசம்பர் 26 அன்று பெட்டியைத் திறக்கும் நாள் என்பதால் பாக்ஸிங் டே என அழைக்கப்படுகிறது. 

1950-ல் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் முதல் பாக்ஸிங் டே டெஸ்டை விளையாடின. இதையடுத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தொடர்ச்சியாக பாக்ஸிங் டே டெஸ்டுகள் நடைபெற்று வருகின்றன. 

1980 முதல் ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங் டே டெஸ்டை நடத்தும் உரிமையை மெல்போர்ன் மைதானம் பெற்றுள்ளது. 1952, 1968, 1974 and 1975 ஆண்டுகளில் மெல்போர்ன் மைதானத்திலும் 1967, 1972, 1976 ஆண்டுகளில் அடிலெய்டிலும் பாக்ஸிங் டே டெஸ்டுகள் நடைபெற்றுள்ளன. 1989-ல் டெஸ்டுக்குப் பதிலாக பாக்ஸிங் டே அன்று ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையே ஒருநாள் ஆட்டம் நடைபெற்றது. 

இந்திய அணி 1985, 1991, 1999, 2003, 2007, 2011, 2014, 2018 ஆகிய வருடங்களில் பாக்ஸிங் டே டெஸ்டுகளில் பங்கேற்றுள்ளது. இந்தப் பட்டியலில் 2020-ம் வருடமும் இணையவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com