ஐசிசி டபிள்யூடிசி ரேங்கிங்: 2-ஆம் இடத்தில் நீடிக்கும் இந்தியா
மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா, ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூடிசி) தரவரிசையில் 2-ஆம் இடத்தை தக்கவைத்துக் கொண்டது.


துபை: மெல்போர்ன் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா, ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூடிசி) தரவரிசையில் 2-ஆம் இடத்தை தக்கவைத்துக் கொண்டது.
இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடும் வாய்ப்பை பெறுவதற்கான போட்டியில் தன்னை தக்க வைத்தது.
ஐசிசி புதன்கிழமை வெளியிட்ட தகவல்படி, மெல்போர்ன் டெஸ்டில் வென்று 30 புள்ளிகள் பெற்ற இந்தியா, 390 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளது. புள்ளிகள் சதவீதமானது இந்தியாவுக்கு 72.2-ஆக உள்ளது.
அந்த டெஸ்டில் தோல்வியைத் தழுவியபோதும் ஆஸ்திரேலியா 322 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அந்த அணியின் புள்ளிகள் சதவீதம் 76.6-ஆக உள்ளது. இதனிடையே, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் புதன்கிழமை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்த நியூஸிலாந்து, அதிலிருந்து 60 புள்ளிகளைப் பெற்று 360 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்தில் உள்ளது.
அந்த அணியின் புள்ளிகள் சதவீதம் 66.7 ஆகும். இதன்மூலம் நியூஸிலாந்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெறும் போட்டியில் உள்ளது.
தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள்ளாக இந்த 3 அணிகளைத் தவிர இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் உள்ளன. அவற்றின் புள்ளிகள் சதவீதம் முறையே 60.8, 34.6 ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...