5-0: இந்தியாவை விடவும் அதிக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அடித்த நியூஸிலாந்து அணி!

இந்த டி20 தொடரில் இந்திய அணியை விடவும் நியூஸிலாந்து அணியே அதிக சிக்ஸர்களையும் அதிக பவுண்டரிகளையும் அடித்துள்ளது...
5-0: இந்தியாவை விடவும் அதிக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அடித்த நியூஸிலாந்து அணி!

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 5-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது இந்தியா. இதன் மூலம் 5-0 என முழுமையாக டி20 தொடரை வென்ற முதல் அணி என்ற சிறப்பைப் பெற்றது. முதலில் ஆடிய இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய நியூஸி அணி 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை மட்டுமே எடுத்தது.

எனினும் இந்த டி20 தொடரில் இந்திய அணியை விடவும் நியூஸிலாந்து அணியே அதிக சிக்ஸர்களையும் அதிக பவுண்டரிகளையும் அடித்துள்ளது. 0-5 எனத் தோற்றாலும் 39 சிக்ஸர்கள், 64 பவுண்டரிகளை அடித்துள்ளது நியூஸிலாந்து அணி. இந்திய அணியோ 35 சிக்ஸர்கள், 55 பவுண்டரிகளை அடித்துள்ளது.

இந்தத் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள், கேன் வில்லியம்சனும் கே.எல். ராகுல். இருவரும் தலா 10 சிக்ஸர்கள். ஆனால் இதை 3 ஆட்டங்களில் அடித்துள்ளார் வில்லியம்சன். ராகுலுக்கு 5 ஆட்டங்கள் தேவைப்பட்டுள்ளன. 

டி20 தொடர் -அதிக சிக்ஸர்கள்

வில்லியம்சன் - 10 சிக்ஸர்கள்
கே.எல். ராகுல் - 10
ஸ்ரெயஸ் ஐயர் - 9
சைஃபர்ட் - 8

டி20 கிரிக்கெட்டுக்கு முக்கியமான எகானமியில் ( ஒரு ஓவருக்கான ரன்கள்) இந்தியப் பந்துவீச்சாளர்களே முன்னணியில் உள்ளார்கள். 5 ஆட்டங்களிலும் விளையாடிய வீரர்களில் குறைவான எகானமி கொண்டவர் பும்ரா. 6.45. அடுத்ததாக, நியூஸி. வீரர் சோதி - 7.30. 

டி20 தொடர் - சிறந்த எகானமி (5 ஆட்டங்கள்)

பும்ரா - 6.45
சோதி - 7.30
சஹால் - 8.35
சான்ட்னர் - 8.40 

இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஓர் அணி ஜெயிக்க, அதிக சிக்ஸர்களையோ அதிக பவுண்டரிகளையோ அடித்தால் மட்டுமே போதாது என்பது நிரூபணமாகியுள்ளது. டாட் என்கிற ரன் எடுக்காத பந்துகளைக் குறைவாகவும் சிங்கிள், இரண்டு ரன்களை அதிகமாகவும் எடுப்பது டி20 கிரிக்கெட்டுக்கு அவசியம் என்று இந்திய அணியின் வெற்றி அதை வலுவாக நிரூபித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com