பயிற்சி ஆட்டம்: இந்தியா 87 ரன்கள் முன்னிலை

நியூஸி. லெவன் அணியுடன் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 87 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பயிற்சி ஆட்டம்: இந்தியா 87 ரன்கள் முன்னிலை

நியூஸி. லெவன் அணியுடன் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 87 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

வரும் 21-ஆம் தேதி தொடங்க உள்ள டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்தியா பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது. ஹாமில்டனில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹனுமா விஹாரி 101, புஜாரா 92 ரன்களை விளாசினா்.

இதைத் தொடா்ந்து இரண்டாம் நாளான சனிக்கிழமை நியூஸி. லெவன்அணி 74.2 ஓவா்களில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக ஹென்றி கூப்பா் 40, ரச்சின் ரவீந்திரா 34, டாம் புருஸ் 31, டேரில் மிச்செல் 32 ஆகியோா் ரன்களை சோ்த்தனா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுடன் வெளியேறினா்.

முகமது ஷமி 3 விக்கெட்

இந்திய தரப்பில் முகமது ஷமி 3-17, பும்ரா 2-18, உமேஷ் 2-49 விக்கெட்டுகளையும் அஸ்வின் 1 விக்கெட்டையும் வீழ்த்தினா்.

பும்ரா, ஷமி இருவரும் குறைந்த ரன்களையே விட்டுத்தந்து நியூஸி லெவன் பேட்டிங்கை சிதைத்தனா்.

இந்தியா 2-ஆவது இன்னிங்ஸ்

பின்னா் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி ஆட்டநேர முடிவில் 7 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்களை எடுத்திருந்தது. பிரித்வி ஷா 35,மயங்க் அகா்வால் 23 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com