ரஞ்சி போட்டி: அரையிறுதியில் மோதும் அணிகள்

ஜம்மு & காஷ்மீரை 167 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது கர்நாடகம் அணி.
ரஞ்சி போட்டி: அரையிறுதியில் மோதும் அணிகள்
Published on
Updated on
1 min read

இரு அணிகள் எதிரணிகளைத் தோற்கடித்துள்ளன. இரு அணிகள் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றன. இதன்படி இந்த வருட  ரஞ்சி போட்டிக்கான அரையிறுதியில் மோதும் அணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன.

ஒடிஷாவுக்கு எதிரான  ஆட்டத்தில் பெங்கால் அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. பெங்கால் முதல் இன்னிங்ஸில் 332 ரன்களும் ஒடிஷா 250 ரன்களும் எடுத்தன.

ஆந்திராவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் அரையிறுதிக்கு நுழைந்துள்ளது செளராஷ்டிரம் அணி. ஆந்திரா முதல் இன்னிங்ஸில் 136 ரன்களும் செளராஷ்டிரம் 419 ரன்களும் எடுத்தன. 

கோவாவை 464 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது குஜராத்.

ஜம்மு & காஷ்மீரை 167 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது கர்நாடகம் அணி.

பிப்ரவரி 29 அன்று ஈடன் கார்டன்ஸில் நடக்கவுள்ள அரையிறுதியில் பெங்கால் - கர்நாடகம் அணிகள் மோதுகின்றன. அதேநாளில் ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள மற்றொரு அரையிறுதியில் குஜராத் - செளராஷ்டிரம் அணிகள் மோதவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com