2-வது டெஸ்டில் இடம்பெறுகிறார் ‘அப்பா’ வாக்னர்: யாரை நீக்குவது என்று நியூஸிலாந்து அணியில் குழப்பம்!

2-வது டெஸ்டுக்கான ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்தால்...
2-வது டெஸ்டில் இடம்பெறுகிறார் ‘அப்பா’ வாக்னர்: யாரை நீக்குவது என்று நியூஸிலாந்து அணியில் குழப்பம்!

இந்தியா - நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 21 அன்று தொடங்கியது. முதல் டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி.

முதல் டெஸ்டில் நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் நீல் வாக்னர் விளையாடவில்லை. அவருடைய முதல் குழந்தை பிறக்கவிருந்ததால் அதன் காரணமாக முதல் டெஸ்டிலிருந்து வாக்னர் விலகினார். இதுவரை 47 டெஸ்டுகளில் விளையாடியுள்ள வாக்னர், 204 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

வாக்னருக்குப் பதிலாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான மேட் ஹென்றி நியூஸி. அணியில் சேர்க்கப்பட்டார். வாக்னருக்குப் பதிலாக முதல் டெஸ்டில் அறிமுகமான ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன், முதல் இன்னிங்ஸில் 44 ரன்கள் எடுத்ததோடு பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.

வாக்னருக்கு பிப்ரவரி 19 அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து சனியன்று தொடங்கவுள்ள 2-வது டெஸ்டில் விளையாடத் தயாராகிவிட்டார் வாக்னர்.

முதல் டெஸ்டில் நியூஸிலாந்தின் அனைத்து வேகப்பந்துவீச்சாளர்களும் பிரமாதமாகப் பந்துவீசியதால் யாருக்குப் பதிலாக வாக்னர் அணியில் இடம்பெறுவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பயிற்சியாளர் கேரி ஸ்டட் கூறியதாவது:

2-வது டெஸ்டில் வாக்னர் நிச்சயம் விளையாடுவார். 2-வது டெஸ்டுக்கான ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்தால் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கவும் தயாராக உள்ளோம். ஆடுகளத்தைப் பார்த்தபிறகு இதுகுறித்து முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com