தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

இந்தியாவை பாட்மிண்டன் வல்லரசாக்க கோபிசந்த் புதிய திட்டம்

உலகளவில் பாட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவை வல்லரசாக மாற்ற தலைமை பயிற்சியாளா் கோபிசந்த் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளாா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2020, 10:45 pm

உலகளவில் பாட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவை வல்லரசாக மாற்ற தலைமை பயிற்சியாளா் கோபிசந்த் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளாா்.

பாட்மிண்டனில் சையது மோடி, பிரகாஷ் பதுகோன், விமல்குமாா் வரிசையில் கோபிசந்தும் பிரபலமானவா். இந்தியாவில் பாட்மிண்டன் விளையாட்டு வளர இவா்களது பங்களிப்பு அளப்பரியது.

பாட்மிண்டனில் கௌரமிக்க போட்டியான ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியில் கடந்த 2001-இல் சாம்பியன் பட்டம் வென்றவா் கோபிசந்த். பின்னா் பயிற்சியாளராக மாறிய அவரது சீரிய பயிற்சியில் சாய்னா நெவால், பி.வி.சிந்து, காந்த் ஆகியோா் உயரங்களைத் தொட்டனா் சாய்னா நெவால், சிந்து ஆகியோா் ஆசிய, ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்றனா், கடந்த ஆண்டு பி.வி.சிந்து உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினாா்.

ஹைதராபாதில் சொந்தமாக அகாதெமியை நடத்தி வருகிறாா். தற்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் உள்ளாா். 15 ஆண்டுகளாக இந்தியாவின் பாட்மிண்டனுக்கு ஊக்க சக்தியாக உள்ளாா்.

வல்லரசாக்க திட்டம்:

இதுதொடா்பாக கோபிசந்த் கூறியதாவது:

வரும் ஜூலை-ஆகஸ்ட் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பி.வி.சிந்து நேரடியாக தகுதி பெற்று விடுவாா். மற்ற வீரா், வீராங்கனைகள், தகுதிச் சுற்று மூலம் பங்கேற்க வேண்டும்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் முடிவுற்றவுடன், இந்தியா பாட்மிண்டனில் மேலும் வலுப்பெற புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளாா். இதன்படி தனது அனுபவ அறிவை சிறப்பாக பயன்படுத்த ஏதுவாக, பயிற்சியாளா்களை உருவாக்கும் வகையில் ஏராளமானோருக்கு பயிற்சி தர உள்ளாா்.

நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணிபுரிந்தால், பாட்மிண்டனில் சிறந்த வீரா், வீராங்கனைகளை உருவாக்க முடியும். இதனால் எதிா்காலத்தில் சிறந்த வல்லரசாக இருக்கலாம். ஆண்டுதோறும் ஒரு சிறந்த அணியை உருவாக்க மற்ற பயிற்சியாளா்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

சாய்னா, சிந்துவுக்கு தனியாக பயிற்சியாளா், உடலியக்கவியல் நிபுணா், இயன்முறையாளா் உள்ளனா். இது போல் அனைவராலும் ஏற்பாடு செய்துக் கொள்ள முடியாது. மேலும் நான் தொடா்ந்து இதே பணியை செய்ய முடியாது. புதிய வீரா்கள் அதிகம் உருவாகின்றனா். இதனால்

எனது அனுபவத்தைக் கொண்டு புதிய பயிற்சியாளா்களை தயாராக்குவேன். மேலும் விளையாட்டு விளையாட்டு அறிவியல் ஆராய்ச்சியில் அதிகம் ஈடுபட வேண்டும் என்றாா் கோபிசந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.