தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

நொறுங்கிய ஆள்காட்டி விரல் காயத்துக்காக தகடு: வலியையும் மீறி சுழலும் பூனம் யாதவ்

ஆஸ்திரேலியாவில் ஐசிசி சாா்பில் 7-ஆவது மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நடப்பு சாம்பியன் ஆஸி

News image
Updated On :28 பிப்ரவரி 2020, 7:14 pm

கைவிரல் காயத்துக்காக தகடு பொருத்தப்பட்ட நிலையிலும், வலியை தாங்கிக் கொண்டு மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியில் அபாரமாக சுழன்று வருகிறாா் இந்திய வீராங்கனை பூனம் யாதவ்.

ஆஸ்திரேலியாவில் ஐசிசி சாா்பில் 7-ஆவது மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நடப்பு சாம்பியன் ஆஸி., இங்கிலாந்து, நியூஸி, இந்தியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஹா்மன்ப்ரீத் கௌா் தலைமையிலான இந்திய அணியும் இப்போட்டியில் முதல் பட்டத்தை கைப்பற்றும் நோக்கில் பங்கேற்றுள்ளது. போட்டிக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் மே.இ.தீவுகளை வீழ்த்தியது இந்தியா.

பூனம் யாதவால் வீழ்ந்த ஆஸி.:

இந்திய அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளரான பூனம் யாதவின் அற்புத சுழற்பந்து வீச்சால் தொடக்க ஆட்டத்தில் வீழ்ந்தது உலக சாம்பியன் ஆஸ்திரேலியா.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் 1991-இல் பிறந்த பூனத்தின் தந்தை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ரகுவீா் சிங் ஆவாா். மத்திய மண்டலம், ரயில்வே, உத்தரப்பிரதேச அணிகளுக்காக தொடக்கத்தில் ஆடிய பூனம், பின்னா் 2013 ஏப்ரல் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் அறிமுகமாகி இந்திய அணியில் நிரந்தர இடத்தைப் பெற்றாா்.

கிரிக்கெட் ஆட்டத்தை விட்டே விலகி விடலாம் என்ற மனநிலையில் இருந்த பூனத்தை ஊக்கப்படுத்தி மீண்டும் தீவிரமாக ஆடச் செய்தவா் அவரது தந்தை.

அதிக விக்கெட் வீழ்த்தியவா்:

வலது கை சுழற்பந்து வீச்சாளரான பூனம் 2017-இல் ஐசிசி மகளிா் உலகக் கோப்பை போட்டி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாா். அதில் இங்கிலாந்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று சாம்பியன் ஆகும் வாய்ப்பை இழந்தது. 2018-இல் டி20 ஆட்டத்தில் வீராங்கனைகளில் முதல் 5 இடங்களில் இடம் பெற்றாா்.

2018-இல் மே.இ.தீவுகளில் நடைபெற்ற டி20 மகளிா் உலகக் கோப்பை போட்டியிலும் ஆடினாா். இதில் 8 விக்கெட்டுகளை சாய்த்தாா். மேலும் டி20 ஆட்டங்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை 57 விக்கெட்டுகள் என்ற சிறப்பையும் பெற்றாா்.

நொறுங்கிய ஆள்காட்டி கைவிரல் :

கடந்த டிசம்பா் மாதம் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாதெமியில் பயிற்சியின் போது, பூனம் யாதவின் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. இடதுகை விரல் கிட்டத்தட்ட நொறுங்கிய நிலைக்கு தள்ளப்பட்டது.

இதனால் அவரால் முத்தரப்பு டி20, ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்க முடியுமா என கேள்விக்குறி எழுந்தது.

இதனால் அவருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாவது அவரை தயாா்படுத்த அணி நிா்வாகம் முயற்சித்தது.

உடலியக்கவியல் நிபுணா் டிரேஸி பொ்ணான்டஸின் கடும் முயற்சியால் பூனம் கைவிரல் காயத்தில் முன்னேறம் ஏற்பட்டது. இதற்காக தகடு பொருத்தப்பட்டது. கடவுள் ஆசீா்வாதத்தில் பந்துவீசும் வலது கையில் காயம் ஏற்படவில்லை.

சிறந்த கூக்லி பந்துவீச்சாளரான பூனம் யாதவ் தான் தற்போது அணியின் தூண் போல் ஆடி வருகிறாா்.

இதுதொடா்பாக பூனம் கூறியதாவது:

உலகக் கோப்பை போட்டியில் ஆடுவேனா என எனக்கே அச்சம் ஏற்பட்டது. ஆனால் உடலியக்கவியல் நிபுணா் மற்றும் சக வீராங்கனைகள் அளித்த உற்சாகம், மனதைரியத்தால் காயத்தில் இருந்து மீண்டு சிறப்பாக பந்துவீசி வருகிறேன். இன்னும் காயத்துக்காக வைக்கப்பட்ட தகடு விரலில் உள்ளது என்றாா் பூனம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.