முதல் அரையிறுதி: கோவாவை பந்தாடியது சென்னையின் எஃப்சி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் எஃப்சி கோவாவுடனான முதல் அரையிறுதி ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது.
முதல் அரையிறுதி: கோவாவை பந்தாடியது சென்னையின் எஃப்சி
Updated on
1 min read


ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் எஃப்சி கோவாவுடனான முதல் அரையிறுதி ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் சென்னையின் எஃப்சி - எஃப்சி கோவா அணிகளுக்கிடையிலான முதல் அரையிறுதி ஆட்டம் சென்னை நேரு மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் ஒரு கோல்கூட அடிக்கவில்லை. இதையடுத்து, இரண்டாவது பாதியில் ஆட்டம் விறுவிறுப்பாகத் தொடங்கியது.

லூசியன் கோயன் (54வது நிமிடத்திலும்), அனிருத் தாபா (61வது நிமிடத்திலும்), எளி சாபியா (77வது நிமிடத்திலும்) மற்றும் லல்லியன்ஸுவாலா (79வது நிமிடத்திலும்) கோல் அடித்து மிரட்டில் முன்னிலையைப் பெறச் செய்தனர். 4 கோல்கள் முன்னிலை பெற்றதால், கோவா அணியின் தோல்வி ஏகதேசம் உறுதியானது. இருப்பினும், எஃப்சி கோவா வீரர் காமா 85வது நிமிடத்தில் மிக முக்கியமான ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார்.

லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகித்த கோவா அணி, மோசமான தடுப்பாட்டத்தின் காரணமாக பின்னடைவைச் சந்தித்தது. 

இதன்மூலம், சென்னையின் எஃப்சி அணி இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது அரையிறுதி ஆட்டம் மார்ச் 7-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com