4 நாள் டெஸ்ட் யோசனை: நாதன் லயன், ஜஸ்டின் லாங்கா் எதிா்ப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 நாள்களை 4 நாளாகக் குறைப்பதற்கு சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) யோசித்து வருவதாக அறிவித்ததற்கு ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளா் நாதன் லயன், அந்நாட்டு அணியின் தலைமைப்
4 நாள் டெஸ்ட் யோசனை: நாதன் லயன், ஜஸ்டின் லாங்கா் எதிா்ப்பு
Updated on
1 min read

சிட்னி: டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 நாள்களை 4 நாளாகக் குறைப்பதற்கு சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) யோசித்து வருவதாக அறிவித்ததற்கு ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளா் நாதன் லயன், அந்நாட்டு அணியின் தலைமைப் பயிற்சியாளா் ஜஸ்டின் லாங்கா் ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் தலைமைச் செயல் அதிகாரி கெவின் ராபா்ட்ஸ், 4 நாள் டெஸ்டுக்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் நிலையில், இவா்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனா்.

நாதன் லயன் கூறுகையில், ‘டெஸ்ட் கிரிக்கெட்டை 4 நாளாகக் குறைப்பது கேலிக் கூத்தானது. இந்த யோசனையை ஐசிசி பரிசீலிக்காது என்று நம்புகிறேன்’ என்றாா்.

லாங்கா் கூறுகையில், ‘நான் பாரம்பரியத்தை விரும்புபவன். எனக்கு 5 நாள் டெஸ்ட் கிரிக்கெட்டே விருப்பம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com