கடந்த 5 டெஸ்டுகளில் 4 சதங்கள்: ஆஸி. பேட்ஸ்மேன் மார்னஸ் லபூஷேன் சாதனை

ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் சிட்னியில் இன்று தொடங்கியது.
கடந்த 5 டெஸ்டுகளில் 4 சதங்கள்: ஆஸி. பேட்ஸ்மேன் மார்னஸ் லபூஷேன் சாதனை

ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் சிட்னியில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஜோ பர்ன்ஸ் 18 ரன்களிலும் வார்னர் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஜோடி சேர்ந்த மார்னஸ் லபூஷேன் - ஸ்மித் ஜோடி நியூஸிலாந்து பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டது. ஸ்மித் மிகப் பொறுமையுடன் விளையாடி 143 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்தார்.

25 வயது மார்னஸ் லபூஷேன், இதுவரை 13 டெஸ்டுகளில் விளையாடி 3 சதங்களும் 7 அரை சதங்களும் எடுத்துள்ளார். கடந்த நான்கு டெஸ்டுகளில் மூன்று சதங்கள் எடுத்து கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஸ்மித்துக்கு நல்ல இணையாக விளங்கிய லபூஷேன் 97 பந்துகளில் அரை சதமெடுத்தார். பிறகு சற்று விரைவாக விளையாடி 163 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் சதத்தை எட்டினார். இதன்மூலம் கடந்த 7 இன்னிங்ஸ்களில் 4 சதங்கள் எடுத்து அசத்தியுள்ளார் லபூஷேன். 

ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 75 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. லபூஷேன் 103, ஸ்மித் 57 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com