பிரித்வி ஷாவுக்கு மீண்டும் காயம்: நியூஸிலாந்துக்குச் சொல்வாரா?

ரஞ்சி  ஆட்டத்தில் விளையாடியபோது இளம் வீரர் பிரித்வி ஷாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் நியூஸிலாந்து தொடர்களில் அவர் இடம்பெறுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பிரித்வி ஷாவுக்கு மீண்டும் காயம்: நியூஸிலாந்துக்குச் சொல்வாரா?
Updated on
1 min read

ரஞ்சி  ஆட்டத்தில் விளையாடியபோது இளம் வீரர் பிரித்வி ஷாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் நியூஸிலாந்து தொடர்களில் அவர் இடம்பெறுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

2018-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2 டெஸ்ட்களில் ஆடி ஒரு சதமும் ஒரு அரை சதமும் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் பிரித்வி ஷா. பின்னர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்தபோது இடுப்பில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை.  இதன்பிறகு, தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்திய புகார் தொடர்பாக பிரித்வி ஷாவுக்கு 8 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. இதனால் சமீபகாலமாக இந்திய டெஸ்ட் அணியில் பிரித்வி ஷாவால் இடம்பெற முடியவில்லை. இதையடுத்து இந்த வருட ரஞ்சிப் போட்டியில் நன்கு விளையாடி இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் முனைப்பில் உள்ளார் பிரித்வி ஷா.

இந்நிலையில் மும்பை அணிக்காக ரஞ்சி ஆட்டத்தில் பங்கேற்ற பிரித்விக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்துக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்தபோது பிரித்விக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனே ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டு தற்போது அவருடைய காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்திய ஏ அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. அந்த அணியில் பிரித்வி இடம்பெற்றுள்ளார். ஜனவரி 10 அன்று இந்திய ஏ அணி நியூஸிலாந்துக்குப் புறப்பட்டுச் செல்கிறது. இதனால் காயம் குணமாகி, பிரித்வியால் நியூஸிலாந்துக்கு உடனடியாகச் செல்லமுடியுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com