நான்கு நாள் டெஸ்ட்: விராட் கோலி எதிர்ப்பு!

ஐந்து நாள்களுக்கு நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டை நான்கு நாள்களாகச் சுருக்க ஐசிசி யோசனை செய்து வருகிறது.
நான்கு நாள் டெஸ்ட்: விராட் கோலி எதிர்ப்பு!

பல டெஸ்ட் ஆட்டங்கள் நான்கு நாள்களுக்குள் முடிந்துவிடுவதால் ஐந்து நாள்களுக்கு நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டை நான்கு நாள்களாகச் சுருக்க ஐசிசி யோசனை செய்து வருகிறது. 2023 முதல் தொடங்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து நான்கு நாள் டெஸ்டைக் கட்டாய நடைமுறைக்குக் கொண்டுவர ஐசிசி திட்டமிட்டுள்ளது. 

இதுகுறித்த செய்தி வெளியானது முதல் ஐசிசியின் புதிய திட்டத்துக்கு பல்வேறுவகையான விமரிசனங்கள் வெளிவந்துள்ளன. கிரிக்கெட் நிர்வாகிகள் இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் வீரர்கள் மட்டும் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, நான்கு நாள் டெஸ்ட் குறித்துக் கூறியதாவது:

என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டின் தன்மையை மாற்றக்கூடாது. டெஸ்ட் கிரிக்கெட்டை வணிகமாக்கும் பொருட்டு, பகலிரவு டெஸ்டுகள் நடக்கின்றன. அது ரசிகர்களிடையே ஆர்வத்தை உண்டுபண்ணுகிறது. அதேசமயம் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் மாற்றிவிடக்கூடாது. அதில் எனக்கு நம்பிக்கையில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மாற்றம் கொண்டு வரலாம் என்றால் பகலிரவு டெஸ்டுகளை நடத்துவதுதான் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com