
மேட் ரென்ஷா, டாம் பாண்டன் ஆகிய இருவரும் கூட்டணி போட்டு எல்லைக்கோட்டுக்கு அருகே பிடித்த கேட்ச் கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹோபர்ட் ஹரிகேன்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் ஆகிய அணிகளுக்கு இடையிலான பிக் பாஷ் லீக் டி20 ஆட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, பென் கட்டிங்கின் பந்தை சிக்ஸருக்கு விரட்டினார் மேத்யூ வேட். எல்லைக்கோட்டுக்கு அருகே நின்றிருந்த ரென்ஷா, பந்தைப் பிடித்தபடி நிலைதடுமாறி கோட்டுக்கு வெளியே சென்றார். அப்போது பந்தை மேலே தட்டி விட்டார். பிறகு காலை கீழே வைக்காத நிலையில் கீழே விழ இருந்த பந்தை உள்ளே தட்டிவிட, எல்லைக்கோட்டுக்கு அருகே காத்திருந்த டாம் பாண்டன் கேட்ச் பிடித்தார்.
பந்து எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்றாலும் கீழே விழவில்லை. ரென்ஷா அதை உள்ளே தட்டி விடும்போது அவருடைய கால் கீழே இல்லை. இதனால் நடுவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. கடைசியில் மூன்றாம் நடுவர், மேத்யூ வேட் ஆட்டமிழந்ததாக அறிவித்தார்.
இந்த கேட்சை அனுமதித்ததற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். எல்லைக்கோட்டுக்கு வெளியே பந்தும் வீரரும் சென்றபிறகும் இதை சிக்ஸர் என அறிவிக்காதது தவறு என்று கூறியுள்ளார்கள். ஆனால் விதிமுறைகளின்படி இது அவுட் என்பது தான் நடுவரின் இறுதி முடிவாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.