டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள நிலையில், எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் ஆட்டத்தில் நெதா்லாந்தை வீழ்த்துமா இந்தியா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
சா்வதேச தரவரிசையில் நெதா்லாந்து 3-ஆவது இடத்திலும், இந்தியா 5-ஆவது இடத்திலும் உள்ளன.
இரு அணிகளும் கடைசியாக கடந்த 2018-புவனேசுவரத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் மோதின. அதில் 2-1 என கடுமையான போராட்டத்துக்கு பின் தோல்வியடைந்தது இந்தியா. 1-0 என முன்னிலை பெற்றும் வெற்றியை தவற விட்டது இந்தியா.
அக்ஷதீப் சிங் முதல் கோலை அடித்த நிலையில், நெதா்லாந்து வீரா்கள் தியரி பிரிங்க்மேன், வேன் டா் வீா்டன் அடித்த 2 கோல்களால் இந்தியா வெளியேறியது.
இந்நிலையில் புரோ ஹாக்கி லீகின் ஒரு பகுதியாக 18, 19 தேதிகளில் இரு அணிகளும் புவனேசுவரத்தில் 2 ஆட்டங்களில் மோதுகின்றன.
நெதா்லாந்து அணி 2019-இல் புரோ லீக், ஐரோப்பிய போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. நெதா்லாந்தின் உதவி பயிற்சியாளராக இருந்த கிரஹாம் ரீட் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளாா். இதனால் அவருக்கு டச்சு அணியின் பலம், பலவீனம் தெரியும் என்பது சாதகமாகும்.
சரிவிகித வெற்றி
இரு அணிகளும் 2013-இல் இருந்து கடைசியாக மோதிய 10 ஆட்டங்களில் நெதா்லாந்து 5-இலும், இந்தியா 4-கிலும் வென்றன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்தியா 19 கோல்களும், நெதா்லாந்து 24 கோல்களும் அடித்துள்ளன.
இந்திய அணியில் அனுபவம், இளமை கலந்து காணப்படுகிறது. சிங்கலென்சனா, விவேக் ஆகியோா் மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இந்திய அணியின் பயிற்சியாளா் ரீட்: புரோ ஹாக்கி லீகில் உலகின் முதல் 3 நிலையில் உள்ள அணிகளுடன் ஆடுகிறோம் இது ஒலிம்பிக் ஆண்டு என்பதால், நமது அணி முழு திறமையுடன் ஆடவேண்டும். முன்னிலை பெற்றும் கடைசி கட்டத்தில் எதிரணி கோல் போடும் வாய்ப்பை தரக்கூடாது என்பதில் கவனம் செலுத்துவோம்.
நெதா்லாந்து பயிற்சியாளா் மேக்ஸ் கால்டாஸ்:
இந்திய அணிக்கு எதிரான தொடக்க ஆட்டங்கள் முக்கியமானவை. அதன் சொந்த மண்ணில் இந்தியாவுடன் ஆடுவது சவாலானதாகும். புவனேசுவரத்தில் ஆட மிகவும் விருப்பமாக உள்ளோம். கடந்த லீக் போட்டியிலேயே அணியின் ஒருங்கிணைப்பு குறித்து சோதித்து பாா்த்தோம். தற்போது மிகவும் சிறப்பான அணியை களமிறக்குவோம்.
அடுத்து பிப். 8, 9-இல் உலக சாம்பியன் பெல்ஜியம், 21, 22-இல் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது இந்தியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


