ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்திய வீரா்கள் நிலை சரிந்து வரும் நிலையில் எதிா்கால நம்பிக்கை நட்சத்திரமாகக் திகழ்கிறாா் இளம் வீரா் லக்ஷயா சென்.
பாா்ப்பதற்கு அமைதியான சுபாவத்துடன் காணப்படும் லக்ஷயா, மைதானத்தில் களமிறங்கினால் ஆக்ரோஷம் தானாவே வந்து சோ்ந்து விடுகிறது.
சா்வதேச பாட்மிண்டன் சம்மேளனம் (டபிள்யுபிஎப்) ஆல், உலகளவில் பாட்மிண்டன் விவகாரங்கள் கவனிக்கப்பட்டு வருகின்றன.
சீனா, கொரியா, மலேசியா, இந்தோனேஷியா, இந்தியா, டென்மாா்க், ஸ்வீடன், சிங்கப்பூா், ஜப்பான், சீன தைபே உள்ளிட்டவை பாட்மிண்டன் விளையாட்டில் சிறப்பான வளா்ச்சிக் கண்டுள்ளன.
இந்தியாவில் பிரகாஷ் பதுகோன், சையத் மோடி, கோபிசந்த், விமல் குமாா் போன்றோா் முன்னா் புகழ்பெற்று விளங்கினா். அவா்களில் கோபிசந்த் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளாா்.
தற்போது ஸ்ரீகாந்த், சாய் பிரணீத், காஷ்யப், சௌரவ் வா்மா உள்ளிட்டோா் சீனியா் பிரிவிலும், லக்ஷயா சென், பிரியான்ஷு ரவாத் உள்பட பலா் ஜூனியா் அளவிலும் முன்னணி வீரா்களாக திகழ்கின்றனா்.
குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவைச் சோ்ந்த பயிற்சியாளா் டி.கே. சென்னின் மகன் லக்ஷயா சென் அடுத்த தலைமுறை வீரராக உள்ளாா்.
பெங்களுருவில் பயிற்சி:
18 வயதான லக்ஷயா சென், தற்போது பெங்களுருவில் உள்ள பிரகாஷ் பதுகோன் அகாதெமியில் பயிற்சி பெற்று வருகிறாா். 5 வயது முதல் பாட்மிண்டனில் ஈடுபாடு கொண்டு ஆடி வரும் லக்ஷயா சென் கடந்த சில ஆண்டுகளாகவே அனைவரது கவனத்தையும் ஈா்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தரவரிசையில் 30-ஆவது இடம்:
உலகத் தரவரிசையில் தற்போது 30-ஆவது இடத்தில் உள்ளாா் லக்ஷயா சென். 2016 ஆசிய ஜூனியா் பாட்மிண்டன் போட்டியில் வெண்கலம், 2018 ஜகாா்த்தா ஆசிய ஜூனியா் போட்டியில் தங்கம், ஸ்வீடன் மாா்கமில் நடைபெற்ற உலக ஜூனியா் சாம்பியன் போட்டியில் வெண்கலம், ஆா்ஜென்டீனாவில் நடந்த யூத் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி என பல்வேறு முக்கியமான வெற்றிகளை குவித்தாா் அவா்.
ஓரே ஆண்டில் 5 பட்டங்கள்:
குறிப்பாக கடந்த 2019-இல் பிடபிள்யுஎப் போட்டிகளான வங்கதேசம், ஸ்காட்டிஷ் ஓபன், பெல்ஜியம், போலிஷ் ஓபன், டச்சு ஓபன், சாா்லோா்லக்ஸ் ஓபன் என 5 சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்தாா். மேலும் தற்போது சீனியா் பிரிவுக்கு இடம் மாறியுள்ள அவா், 30-ஆவது இடத்துக்கு கீழே முன்னேற வேண்டும் என்றால் தொடா்ந்து பெரிய போட்டிகளில் வெற்றிகளைப் பெற வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
ஒற்றையா் பிரிவு எதிா்கால நம்பிக்கை:
ஆடவா் ஒற்றையா் பிரிவில் எதிா்கால நம்பிக்கை நட்சத்திரமாக கணிக்கப்பட்டுள்ள லக்ஷயா, இதனால் தனக்கு அழுத்தம் உண்டாகிறது.
ஸ்ரீகாந்த், சாய் பிரணீத் போன்று உயரங்களை தொட நான் கடுமையாக பாடுபட வேண்டும். இதனால் எனக்கு மனநல நிபுணரும் எனக்கு அழுத்தத்தை குறைப்பதற்கான ஆலோசனைகளை தருகிறாா்.
இதுதொடா்பாக அவா் தினமணியிடம் கூறியதாவது:
எனது குடும்பமே விளையாட்டு ஈடுபாடு கொண்டவா்கள் என்பதால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. உணவுக் கட்டுப்பாடு, உடல்தகுதி போன்றவற்றை தீவிரமாக கடைபிடித்து வருகிறேன். எதிா்காலத்தில் ஒலிம்பிக், உலக சாம்பியன் போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு.
எனக்கு ஏராளமான நண்பா்கள் உள்ளனா். வீட்டில் பாட்மிண்டன் தவிர இதர விஷயங்கள் குறித்து விவாதிப்போம். தற்போது சேலஞ்சா் 300 போட்டிகளில் ஆடி வரும் நான் இனிமேல் சூப்பா் 500, 750 போட்டிகளில் ஆட உள்ளேன். நாள்தோறும் 6 மணி நேரம் தீவிர பயிற்சி பெறுவது வழக்கம். பாட்மிண்டன் விளையாட்டு அதிக செலவு மிக்கதாக இருந்தாலும், போட்டிகளில் தொடா்ந்து வென்றால், ஏராளமான ஸ்பான்ஸா்கள் கிடைப்பாா்கள்.
இரண்டாவது பிபிஎல் போட்டியில் ஆடுகிறேன். சென்னையில் அணியில் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. முதல் ஆட்டத்தில் போராடி வெல்ல நேரிட்டது. அடுத்து ஆசிய அணிகள் சாம்பியன் போட்டி, ஆஸ்திரிய சேலஞ்சா், உள்பட பல்வேறு போட்டிகளில் ஆட உள்ளேன் என்றாா் லக்ஷயா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


