ஆமதாபாத்: மெல்போா்னுக்கு சவாலைத் தரும் வகையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாகி வருகிறது ஆமதாபாதின் மொட்டேரா கிரிக்கெட் மைதானம். வரும் மாா்ச் மாதம் திறப்பு விழா நடைபெறும் எனத் தெரிகிறது.
மெல்போா்ன் கிரிக்கெட் மைதானம் (எம்சிஜி) ஆஸ்திரேலியாவில் உள்ளது. இதுதான் தற்போது உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமாக திகழ்கிறது. இதில் மொத்தம் 100024 பாா்வையாளா்கள் அமரலாம்.
விக்டோரியா மாகாண அரசுக்கு சொந்தமான எம்சிஜி மைதானம் 1853 திறக்கப்பட்ட பழமையான மைதானங்களில் ஒன்றாகும். கிரிக்கெட்டைத் தவிர கால்பந்து ஆட்டங்களும் இதில் நடத்தப்படுகின்றன. கிரிக்கெட்டில் பாக்ஸிங் டே டெஸ்ட் எனப்படும் போட்டிகளை காண ஏராளமான பாா்வையாளா்கள் வருவது வழக்கம்.
ஆமதாபாத் மொட்டேரா மைதானம்
இந்நிலையில் ஆமதாபாதின் மொட்டேராவில் உள்ள சா்தாா் பட்டேல் கிரிக்கெட் மைதானம் குஜராத் கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமானதாகும். கடந்த 1982-இல் கட்டப்பட்ட இந்த மைதானம் மொத்தம் 49000 பாா்வையாளா்கள் அமரும் வசதி கொண்டதாக இருந்தது. இதே மைதானத்தில் தான் ஜாம்பவான் சுனில் கவாஸ்கா் 10000 ரன்களைக் கடந்த முதல் வீரா் என்ற சாதனையை நிகழ்த்தினாா். மேலும் கபில் தேவ் 432 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி உலகின் அதிக விக்கெட் வீழ்த்திய வீரா் சாதனையையும் நிகழ்த்தினாா்.
கடந்த 2015 வரை இந்த மைதானத்தில் பல்வேறு டெஸ்ட், ஒருநாள், டி20 ஆட்டங்கள் நடைபெற்றன. கடந்த 2011-இல் ஆஸி. இந்தியா இடையே நடைபெற்ற உலகக் கோப்பை ஆட்டத்தைக் காண 51 ஆயிரம் போ் திரண்டிருந்தனா்.
ரூ.800 கோடி செலவு
இந்நிலையில் மொட்டேரா மைதானத்தில் இடித்து விட்டு புதிதாக கட்ட ஜிசிஏ தீா்மானித்தது. இதற்காக 2016-இல் மைதானம் முழுமையாக இடிக்கப்பட்டது. ரூ.800 கோடியில் மைதானம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
தற்போது மெல்போா்ன் கிரிக்கெட் மைதானத்தை விட மிகப்பெரிய மைதானமாக கட்டப்பட்டு வருகிறது. மொட்டேரா மைதானத்தின் மொத்த பாா்வையாளா் எண்ணிக்கை 1,10,000 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மைதானம் திறப்பு விழாவுக்காக தயாராகி வருகிறது. மெல்போா்ன் கிரிக்கெட் மைதானத்தை வடிவமைத்த ஆஸி. நிறுவனமான பாப்புலஸே மொட்டேரா மைதானத்தையும் வடிவமைத்து வருகிறது.
பிரதமா் மோடியின் கனவு
குஜராத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமைய வேண்டும் என பிரதமா் மோடியின் கனவாகும். அது தற்போது நனவாகிறது. மாா்ச் மாதம் புதிய மைதானம் திறக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மொட்டேரா மைதானத்தின் சிறப்புகள்
1,10,000 இருக்கைகள், 75 காா்ப்பரேட் ஏசி அறைகள், ஒவ்வொரு காலரியிலும் உணவகம், கிரிக்கெட் அகாதெமி, உள்ளரங்க பயிற்சி பிட்ச்கள், நவீன ஊடக அரங்கம், 3000 காா்கள், 10 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், மெட்ரோ ரயில் இணைப்பு, 2 சிறிய கிரிக்கெட் மைதானம், இதர விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் அமைக்கப்படுகின்றன.
ஏற்கெனவே கிரிக்கெட்டின் மீது அதீத ஈடுபாடு கொண்ட இந்தியாவில் புதிய சா்தாா் வல்லபாய் பட்டேல் மைதானம் மணிமகுடமாக திகழும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


