இன்ஸ்டகிராமில் 1000 பதிவுகள்: கோலி மகிழ்ச்சி

2008 முதல் 2020 வரை. பல விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.
இன்ஸ்டகிராமில் 1000 பதிவுகள்: கோலி மகிழ்ச்சி
Published on
Updated on
1 min read

இன்ஸ்டகிராம் தளத்தில் தனது ஆயிரமாவது பதிவை இன்று எழுதினார் இந்திய கேப்டன் விராட் கோலி.

2008 முதல் 2020 வரை. பல விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இதுவே என்னுடைய 1000-வது பதிவு என்று எழுதியுள்ளார். இள வயது கோலியும் தற்போது உள்ள கோலியும் ஒன்றாக இருப்பது போன்ற ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். 

இன்ஸ்டகிராம் தளத்தில் 69.5 மில்லியன் பேர் கோலியைப் பின்தொடர்கிறார்கள்.

கரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் பலரும் வேலையின்றி அவதிப்பட்டு வருகிற நிலையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் இன்ஸ்டகிராம் மூலமாக ரூ. 3.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். மார்ச் 12 முதல் மே 14 வரை இன்ஸ்டகிராம் மூலமாக அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் பட்டியலை அட்டெய்ன் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. உலகம் முழுக்க கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த இக்காலக்கட்டத்தில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ. 17.19 கோடி சம்பாதித்து விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 6-ம் இடத்தில் உள்ள கோலி, இன்ஸ்டகிராம் தளத்தில் நிறுவனங்கள் பற்றிய விளம்பரப் பதிவுகளின் மூலம் ரூ. 3.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளார்.  முதல் 10 வீரர்களில் இடம்பெற்றுள்ள ஒரே கிரிக்கெட் வீரர் கோலி மட்டுமே. ஊரடங்கு காலக்கட்டத்தில் இன்ஸ்டகிராமில் 3 விளம்பரப் பதிவுகள் மட்டுமே வெளியிட்டுள்ளார் கோலி. அந்த ஒவ்வொரு விளம்பரப் பதிவுக்கும் அவருக்குக் கிட்டத்தட்ட ரூ. 1.21 கோடி கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com