
ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்துவைத் தோற்கடித்து தங்கம் வென்ற ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினின் தந்தை காலமாகியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் கரோலினாவின் தந்தை கொன்ஸாலோன் மரின் பெரஸ் விபத்து ஒன்றில் சிக்கினார். விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக பெரஸுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பெரஸ் நேற்று மரணமடைந்துள்ளார். இத்தகவலை ஸ்பெயின் பாட்மிண்டன் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பெரஸின் மறைவுக்கு ஸ்பெயின் பாட்மிண்டன் சம்மேளனம் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட விபத்தின் பின்விளைவுகளால் பெரஸ் மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார். இந்தக் கடினமான தருணத்தில் மரினின் குடும்பத்துக்கு எல்லாவிதமான ஆதரவையும் தரத் தயாராக உள்ளோம் என ஸ்பெயின் பாட்மிண்டன் சம்மேளனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
27 வயது கரோலினா மரின், கடந்த மாதம் முதல் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அடுத்த வருடம் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் மீண்டும் தங்கம் வெல்ல வேண்டும் என்கிற குறிக்கோளுடன் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.