நீச்சல் உடையை நான் அணியக் கூடாதா?: பிரபல டென்னிஸ் வீராங்கனை சாடல்!

எனக்கு 22 வயது. நீச்சல் குளத்தில் நீச்சல் உடைகளை நான் அணிவேன்...
நீச்சல் உடையை நான் அணியக் கூடாதா?: பிரபல டென்னிஸ் வீராங்கனை சாடல்!

நீச்சல் உடையை அணியக் கூடாது என்று கருத்து கூறிய ரசிகர்களைப் பிரபல டென்னிஸ் வீராங்கனை ஒசாகா விமரிசனம் செய்துள்ளார்.

உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா முதலிடத்தைப் பிடித்தார். 

போர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஒரு வருடத்தில் ரூ. 284 கோடி (37.4 மில்லியன் டாலர்) வருமானம் ஈட்டியுள்ளார் 22 வயது ஒசாகா. இதன்மூலம் கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்த வருடம் செரீனாவின் வருமானத்தை விடவும் ரூ. 10.64 கோடி (1.4 மில்லியன் டாலர்) அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளார் ஒசாகா.

1990 முதல் டென்னிஸ் வீராங்கனைகளின் வருமானத்தை போர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டு வருகிறது. இந்த விதத்தில், இதுவரை எந்தவொரு விளையாட்டு வீராங்கனையும் ஓர் ஆண்டில் ரூ. 284 கோடி வருமானம் ஈட்டியதில்லை. இதன்மூலம் புதிய சாதனை நிகழ்த்தினார் ஒசாகா. இதற்கு முன்பு 2015-ல் மரியா ஷரபோவா 225.65 கோடி வருமானம் ஈட்டியதே அதிகமாக இருந்தது. அந்தச் சாதனையை ஒசாகா தாண்டினார்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் நீச்சல் உடை அணிந்த புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்று கருத்து கூறிய ரசிகர்களைப் பிரபல டென்னிஸ் வீராங்கனை ஒசாகா விமரிசனம் செய்துள்ளார்கள். இதுகுறித்து அவர் ட்வீட் செய்ததாவது:

என்னுடைய அப்பாவித் தோற்றத்தை நான் கடைப்பிடிக்க வேண்டும், மற்றவர்கள் போல நடந்துகொள்ளக் கூடாது என்று பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். எனக்கு 22 வயது. நீச்சல் குளத்தில் நீச்சல் உடைகளை நான் அணிவேன். நான் என்ன உடையை அணிய வேண்டும் என்று நீங்கள் கருத்து சொல்ல முடியும் என ஏன் நினைக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

ஒசாகா, இரு முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com