பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் வஹாப் ரியாஸ்!

அக்டோபர் 2018-ல் கடைசியாக டெஸ்ட் ஆட்டத்தில் வஹாப் ரியாஸ் விளையாடினார்.
பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் வஹாப் ரியாஸ்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு 20 பேர் கொண்ட ஆரம்பக்கட்ட அணியை பாகிஸ்தான் தேர்வு செய்துள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் இடம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெற்றுள்ளன. இதையடுத்து ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் 3 டெஸ்ட், 3 டி20 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது.

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் அணி ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான 20 பேர் கொண்ட ஆரம்பக்கட்ட அணியை பாகிஸ்தான் அணி தேர்வு செய்துள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் இடம்பெற்றுள்ளார்.

அக்டோபர் 2018-ல் கடைசியாக டெஸ்ட் ஆட்டத்தில் வஹாப் ரியாஸ் விளையாடினார். முகமது அப்பாஸ், நசீம் ஷா, உஸ்மான் ஷின்வாரி, ஷாகீன் அப்ரிடி, சொஹைல் கான், பஹீம் அஷ்ரப், இம்ரான் கான் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களுடன் அவர் இணைந்துள்ளார். இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த 9 வீரர்கள் டெஸ்ட் பட்டியலில் இடம்பெறவில்லை. அவர்கள் டி20 தொடரில் விளையாடுவார்கள். 

டெஸ்ட் தொடருக்கான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி:

அசார் அலி (கேப்டன்), பாபர் அசாம் (துணை கேப்டன்), அபித் அலி, அசாத் சபிக், பஹீம் அஷ்ரப், பவாத் அலாம், இமாம் உல் ஹக், இம்ரான் கான், கஷிப் பட்டி, முகமது அப்பாஸ், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), நசீம் ஷா, சர்பராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), சதாப் கான், ஷாகீன் அப்ரிடி, ஷான் மசூத், சொஹைல் கான், உஸ்மான் ஷின்வாரி, வஹாப் ரியாஸ், யாசிர் ஷா.

டெஸ்ட் தொடர்

ஆகஸ்ட் 5-9 - முதல் டெஸ்ட், மான்செஸ்டர் 

ஆகஸ்ட் 13-17 – 2-வது டெஸ்ட், செளதாம்ப்டன் 

ஆகஸ்ட் 21-25 – 3-வது டெஸ்ட், செளதாம்ப்டன்

டி20 தொடர்

ஆகஸ்ட் 28 – முதல் டி20, மான்செஸ்டர் 

ஆகஸ்ட் 30 – 2-வது டி20, மான்செஸ்டர் 

செப்டம்பர் 1 – 3-வது டி20, மான்செஸ்டர் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com