ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ஹிமா தாஸின் பெயர் பரிந்துரை

தடகள வீராங்கனை ஹிமா தாஸின் பெயர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ஹிமா தாஸின் பெயர் பரிந்துரை
Updated on
1 min read

தடகள வீராங்கனை ஹிமா தாஸின் பெயர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்திய விளையாட்டு வட்டாரத்தில் சிறந்த வீரா், வீரா்களுக்கு ராஜீவ் கேல் ரத்னா, அா்ஜுனா விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இதன்படி 2016 ஜனவரி 1 முதல் 2019 டிசம்பா் 31 தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு மேற்கண்ட விருதுகளுக்கு பெயா்களைப் பரிந்துரைக்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் வீரா், வீராங்கனைகள் பெயா்களைப் பரிந்துரைக்கின்றன.

2018-ல் யு-20 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் ஹிமா தாஸ். ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 4*400 மீ. தொடர் ஓட்டத்திலும் கலப்பு 4*400 மீ. தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்ற ஹிமா தாஸ், 400 மீ. ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். 2018-ல் அர்ஜூனா விருதைப் பெற்றார்.  

இந்நிலையில் தடகள வீராங்கனை ஹிமா தாஸின் பெயரை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அசாம் மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com