

பனாமா நாட்டைச் சேர்ந்த குத்துச்சண்டை ஜாம்பவான் ராபர்டோ டுரன் (69) கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய மகன் ராபின் தெரிவித்ததாவது: என் தந்தையின் பரிசோதனை முடிவு வந்துள்ளது. கரோனாவால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். நல்லவேளையாக பெரிதளவில் கரோனா அறிகுறிகள் எதுவும் தந்தைக்கு இல்லை. (மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும்) அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் தற்போது இல்லை. வெண்டிலேட்டர் உதவியும் தேவைப்படவில்லை. மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் என்றார்.
16 வயது முதல் 50 வயது வரை குத்துச்சண்டைப் போட்டிகளில் கலந்துகொண்ட ராபர்டோ டுரன், 119 ஆட்டங்களில் பங்கேற்று 103-ல் வென்று 16-ல் தோல்வியடைந்துள்ளார். 70 முறை நாக் அவுட் மூலம் வென்றுள்ளார். ஆறு முறை உலக சாம்பியன் ஆகியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.