2ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்

2ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்

2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

கிறைஸ்ட்சா்ச் நகரில் நடைபெறும் 2-ஆவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக விஹாரி 55, புஜாரா 54, பிருத்வி ஷா 54 ரன்கள் சேர்த்தனர். நியூஸி. தரப்பில் ஜேமிஸன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லாதம் 52, ஜேமிஸன் 49 ரன்கள் எடுத்திநர். முகமது ஷமி 4 விக்கெட்டுகள், பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த நிலையில், 7 ரன்கள் முன்னிலைப் பெற்று இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பௌல்ட் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதையடுத்து இந்திய அணி தற்போது 97 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com