தோனியிடமிருந்து தான் ரோஹித் சர்மா தலைமைப் பண்பை கற்றுக் கொண்டார்: ராயுடு

தோனியிடமிருந்து தான் ரோஹித் சர்மா தலைமைப் பண்பைக் கற்றுக் கொண்டார் என சிஎஸ்கே வீரர் அம்பட்டி ராயுடு கூறியுள்ளார்.
தோனியிடமிருந்து தான் ரோஹித் சர்மா தலைமைப் பண்பை கற்றுக் கொண்டார்: ராயுடு
Updated on
1 min read


தோனியிடமிருந்து தான் ரோஹித் சர்மா தலைமைப் பண்பைக் கற்றுக் கொண்டார் என சிஎஸ்கே வீரர் அம்பட்டி ராயுடு கூறியுள்ளார்.

இன்ஸ்டகிராமில் உரையாடிய ராயுடு கூறியதாவது:

ரோஹித் சர்மா மற்றும் தோனியின் தலைமைப் பண்பு குறித்து கேட்கிறீர்கள். கோலி, ரோஹித் சர்மா என எல்லோருக்கும் கேப்டனாக இருந்தவர் தோனி. இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய தோனியைப் பார்த்து தான் ரோஹித் சர்மா தலைமைப் பண்பைக் கற்றுக்கொண்டுள்ளார். இரண்டிலும் வேறுபாடு இருக்காது. ரோஹித் சர்மா சரியான வழியில் சென்றுகொண்டிருக்கிறார். தோனி சாதித்தவற்றை ரோஹித் சர்மா அடைய இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டும். ஆனால் நிச்சயம் அந்த இடத்தை அவர் அடைவார் என்று கூறியுள்ளார்.

2013 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா தலைமையில் விளையாடினார் ராயுடு. அதன்பிறகு சிஎஸ்கே அணி ராயுடுவைத் தேர்வு செய்தது. 2018-ல் ஐபிஎல் போட்டியை சிஎஸ்கே வென்றதில் முக்கியப் பங்கு வகித்தார் ராயுடு. அந்த வருடம் 16 ஆட்டங்களில் 602 ரன்கள் எடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com