நவம்பரில் நடைபெறவுள்ள அபுதாபி டி10 லீக் போட்டி

முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அபுதாபி டி10 லீக் போட்டி குறித்த அதிகாரபூர்வத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நவம்பரில் நடைபெறவுள்ள அபுதாபி டி10 லீக் போட்டி
Updated on
1 min read

கரோனா அச்சுறுத்தலால் முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அபுதாபி டி10 லீக் போட்டி குறித்த அதிகாரபூர்வத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்துக்கான அபுதாபி டி10 லீக் போட்டி நவம்பர் 19 முதல் 28 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-ல் நடைபெற்ற டி10 லீக் போட்டியை டுவைன் பிராவோ தலைமையிலான மராத்தா அராபியன்ஸ் அணி வென்றது.

ஐந்து நாள் கிரிக்கெட், 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக வேறொரு வடிவம் எடுத்தது. பிறகு டி20 கிரிக்கெட், ஆரம்பித்த வேகத்தில் ஜெட் வேகத்தில் வளர்ச்சியடைந்தது. இந்த மாற்றங்களால் கிரிக்கெட்டில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகள் கிடைத்தன. இப்போது 10 ஓவர் கிரிக்கெட் அமலுக்கு வந்துள்ளது. எனினும் தற்போது லீக் அளவில் மட்டுமே விளையாடப்பட்டு வருகிறது. அபுதாபி டி10 லீக் போட்டியின் ஒவ்வொரு ஆட்டங்களும் 90 நிமிடங்கள் நடக்கும். 10 ஓவர்கள் மட்டுமே ஓர் அணிக்கு வழங்கப்படும்.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ஷாஜி உல் முல்க், 10 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் 2017 முதல் நடத்தி வருகிறார். இதற்கு ஐசிசி அனுமதி அளித்துள்ளது. ஐபிஎல் போட்டியை பிசிசிஐ நடத்துவதுபோல டி10 லீக் போட்டியை ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் சங்கம் அங்கீகரித்துள்ளது. இந்த வருடமும் அபுதாபியில் உள்ள ஷேக் ஜயத் கிரிக்கெட் மைதானத்தில் அனைத்து டி10 ஆட்டங்களும் நடைபெறவுள்ளன. முதல் இரு வருடங்களில் இப்போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. எனினும் 2019 முதல் அடுத்த ஐந்து வருடங்களுக்கு அபுதாபியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com