
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பதிலாக இந்தியா - பாகிஸ்தான், ஆஷஸ் தொடர்களை நடத்த வேண்டும் என்று ஐசிசிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.
இந்த வருட இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நான்கு டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் ஆடவுள்ளது. கரோனா பாதிப்பினால் இதுபோன்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தொடர்களை ரத்து செய்து பரபரப்பான கிரிக்கெட் தொடர்களை நடத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
ஒரு பேட்டியில் பிராட் ஹாக் கூறியதாவது:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நீக்கப்பட வேண்டும். சிறிது காலத்துக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தொடர்களை நிறுத்தி வைக்கலாம். கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் மக்களுக்குப் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியா - பாகிஸ்தான், ஆஷஸ் தொடர்களை நடத்தலாம். சவாலான போட்டிகளைப் பார்க்க ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் 2 டெஸ்டுகள் இந்தியாவிலும் 2 டெஸ்டுகள் பாகிஸ்தானிலும் நடைபெற வேண்டும். பல ஆண்டுகளாக இந்தியா - பாகிஸ்தான் தொடர் நடைபெறவேயில்லை. மக்கள் இத்தொடருக்காக ஏங்குகிறார்கள் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.